நாற்பதிலும் நலம்!--ஹெல்த் ஸ்பெஷல்,
நாற்பதிலும் நலம்! நா ற்பது வயதில் நாய்க் குணம் என்று நம் ஊரில் சொல்வதை, மருத்துவ உலகம் 'மிட்லைஃப் ப்ளூஸ்’, 'மிட் லைஃப் கிரைச...
பெரும்பாலும் இந்த வயதை ஒருவர் கடக்கும்போதுதான், வயதான அவரது அப்பாவும் அம்மாவும் நோய்வாய்ப்பட்டு இறப்பார்கள். இந்தக் காலத்தில்தான் ஒருவருக்கு குடும்பம், வேலை என எல்லா இடங்களிலும் பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பதின்பருவத்தின் உச்சத்தில் இருப்பார்கள். அதனால், அவர்களின் நடவடிக்கைகள், பேச்சு, செயல்பாடு எல்லாமே பதற்றத்தை ஏற்படுத்தும். உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். கணவன் - மனைவி இடையே சண்டை அதிகரிக்கும். பால்ய கால நண்பர்கள், பள்ளி - கல்லூரிகளில் உடன் படித்தவர்கள் எல்லாம் பங்களா வீடு, சொகுசு கார், வெளிநாட்டு வேலை அல்லது பணம் கொழுக்கும் பிசினஸ் என இருப்பதைப் பார்த்து, நாம் இத்தனை ஆண்டுகள் வேலை செய்தும் பெரிதாக எதையும் சேர்த்து வைக்கவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மை ஏற்படும். இந்த நேரத்தில் காலம் ஏற்படுத்தும் சவால்களைச் சமாளிக்க முடியாமல் பலர் மனம் தளர்ந்து போவார்கள். ஆனால், இவை எல்லாம் தற்காலிகமானவைதான். இந்த 'மிட்லைஃப் ப்ளூஸ்’ என்பது பொதுவாக நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் வரைதான் நீடிக்கும். இந்தத் திருப்புமுனைப் பருவத்தைச் சாமர்த்தியமாக சமாளித்துவிட்டால், பிறகு வாழ்க்கை டாப் கியரில் வேகம் எடுக்கும்!
2 comments
nice tips... thanks for sharing good info... rishvan.. http://www.rishvan.com
அன்பு நெஞ்சம் Suresh Subramanian அவர்களின் கருத்துக்களுக்கு நன்றிகள். தொடர்ந்து பார்த்து தங்கள் கருத்துக்களை அவ்வப்போது தெரிவிக்க வேண்டுகின்றேன். எனது முயற்சிக்கு தங்களின் கருத்துக்கள் மிக்க பயனுள்ளதாக உள்ளது. மறவாமல் அடிக்கடி தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
Post a Comment