சமையல் அரிச்சுவடி, -- சமையல் குறிப்புகள்,
முட்டை கோஸ் வேகும் போது வரும் நாற்றத்தைப் போக்க, சிறுத்துண்டு இஞ்சியை அதில் போடவும். ஆரஞ்சு, எலுமிச்சை இவைகளை பிழியும் போது, அதிகச் சாறு ...

ஆரஞ்சு, எலுமிச்சை இவைகளை பிழியும் போது, அதிகச் சாறு கிடைக்க வேண்டுமானால், பிழிவதற்கு முன் அந்த பழங்களை மிதமானசூடுள்ள வெந்நீரில் முக்கி எடுக்கவும்.
கல்லுப்பை உபயோகிக்கும் போது, அதை தண்ணீரில் கரைத்து உபயோகப்படுத்தினால் அதிலிருந்து கல், மண் முதலியன அடியில் தங்கி விடும். கரைத்ததை ஊற்றும் போது அடியில் இருக்கும் தண்ணீரை ஊற்றாமல் இருக்க வேண்டும்.
புதிதாக ஒரு சமையலை கற்றுக்கொள்ள வேண்டுமானால், அதை எழுதி, சமையலறையில் ஒரு சவுகரியமான இடத்தில், கதவிலோ, சுவரிலோ, ஒட்டி வைத்துக் கொள்ளவும். அவ்வப்போது அதைப் பார்த்து சமையலைச் செய்யலாம்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள், வாடிவதங்கி இருந்தால், அவற்றை எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீரில், சிறிது நேரம் ஊற வைக்கவும். சிறிது நேரத்தில் ப்ரஷ்ஷான காய்கறி போலாகிவிடும்.
1 comment
நல்ல குறிப்பு நன்றி.
Post a Comment