''குடும்ப அட்டைக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று சொல்கிறார்களே... எப்படி விண்ணப்பிப்பது?'' ''குடும்ப அட்டைக...
''குடும்ப அட்டைக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று சொல்கிறார்களே... எப்படி விண்ணப்பிப்பது?''

''குடும்ப
அட்டைக்கு இணையத்தில் விண்ணப்பிக்க முடியாது. ஆனால், விண்ணப்பப் படிவத்தை
இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். படிவத்தை நிரப்பி, அதனுடன்
இருப்பிட முகவரிக்கான சான்றிதழ் நகலை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.
மாநகரங்களில் உணவுப் பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்திலும்
மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பித்த
60 நாட்களுக்குள் குடும்ப அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த
நடவடிக்கைகளுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம். நான் ரேஷன் கடையில் எந்தப்
பொருளும் வாங்கப்போவது இல்லை; இருப்பிட அடையாளத்துக்காக மட்டுமே குடும்ப
அட்டைக்காக விண்ணப்பிக்கிறேன் என்று சொல்பவர்கள், தட்கல் முறையில்
விண்ணப்பித்தால், 10 நாட்களில் 'நோ கமாடிட்டி ரேஷன் கார்டு’
பெற்றுக்கொள்ளலாம். இதற்கு 100 ரூபாய் கட்டணம். விண்ணப்பப் படிவத்தை
www.consumer.tn.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
1 comment
ரொம்ப நன்றிங்க...
Post a Comment