டிரை ஃப்ரூட் பொங்கல்--சமையல் குறிப்புகள்,
டிரை ஃப்ரூட் பொங்கல் தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கப் பாசி பருப்பு - 1/2 கப் வெல்லம் - 11/2 கப் பேரீச்சம்பழம் நறுக்கி...

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 11/2 கப்
பேரீச்சம்பழம் நறுக்கியது - 1 கப்
நெய் - 1/4 கப்
முந்திரி, திராட்சை, செர்ரிபழம், பாதாம், பிஸ்தா, டுட்டி ஃப்ரூட்டி அனைத்தும் நறுக்கி & 1 கப்
பால் & 2 கப்
ஏலக்காய் & 3
உப்பு & தேவையான அளவு
செய்முறை
பாசி பருப்பை லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அரிசி, பருப்பு, பேரீஞ்சம் பழம், பால், 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைக்க வேண்டும். அதன்பிறகு அடுப்பை சிம்மில் வைத்து, வேகவைத்ததோடு பொடித்த வெல்லம், உப்பு சேர்க்கவேண்டும். வெல்லம் கரைந்ததும், நெய் விட்டு, ஏலக்காய் நுணுக்கிப் பொடியாக்கி சேர்க்க வேண்டும். இறக்குவதற்கு முன் செர்ரி, டுட்டி ஃப்ரூட்டி சேர்க்கவேண்டும். அதன்பிறகு முந்திரி, திராட்சையோடு பொடியாக நறுக்கி பாதாம், பிஸ்தா இரண்டையும் நெய்யில் வறுத்து பொங்கலில் போடவேண்டும். ஒரு கொதி விட்டு இறக்கினால் ஃப்ரூட் பொங்கல் ரெடி! இனிப்பு குறைவாக சாப்பிடுபவர்கள் வெல்லத்தை குறைத்துக்கொள்ளலாம்!
Post a Comment