சிசேரியன் சிக்கலுக்கு சிறப்பான தீர்வுகள் !--ஹெல்த் ஸ்பெஷல்,
ஒருநாள் வலியை பொறுக்கலாம்... வாழ்நாள் வலியை தவிர்க்கலாம் சிசேரியன் சிக்கலுக்கு சிறப்பான தீர்வுகள் ! 'சென்னையைப் பொறுத்தவ...

- அதிர்ச்சி தர வேண்டிய இச்செய்தி, 'அப்படியா..?’ என்கிற சம்பிரதாய விசாரணையுடன் அடுத்த வேலையை நோக்கி நகர வைக்கிறது. அந்தளவுக்கு சிசேரியன் பிரசவத்துக்குப் பழகிவிட்டார்கள் மக்கள்!
''முன்பெல்லாம் பதினைந்து, இருபது சதவிகித சிசேரியன் கேஸ்களை அட்டெண்ட் பண்ணிட்டு இருந்த நாங்க, இப்ப ஐம்பது சதவிகித கேஸ்களை அட்டெண்ட் பண்றோம்'' என்று சிசேரியனின் 'விஸ்வரூபம்' பேசும் சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவ நிலையத்தின் முண்னாள் இயக்குநர் டாக்டர் மோகனாம்பாள்,
''சிசேரியன் பிரசவங்கள் அதிகரிச்சு இருக்குனு சொல்ற அதேநேரத்துல, பிரசவ சிக்கல்களால ஏற்படுற தாய், சேய் இறப்பு சதவிகிதம் இப்போ ரொம்பவே குறைஞ்சுருக்கு. அதேபோல, சிரமமான பிரசவங்களால ஃபோர்செப்ஸ் போட்டு குழந்தையை எடுக்கறது, சிலசமயம் குழந்தையோட மூளைவளர்ச்சி பாதிப்படைய காரணமா ஆயிடும். இப்போ, அதுமாதிரியான குழந்தைகளின் சதவிகிதமும் குறைஞ்சுருக்கு. இதுக்கெல்லாம் சிசேரியன் மருத்துவ சிகிச்சைக்குதான் நன்றி சொல்லணும்'' என்றும் நெகிழ்கிறார்.
''தாய்க்கு நீர்வற்றிப் போறது, குழந்தை பெருசா இருப்பது, அம்மாவோட இடுப்பு எலும்பு விரிவடையாம இருப்பது, கர்ப்பவாய் திறக்காமல் இருப்பது, அம்மாவின் வயது 35-க்கும் மேல் இருப்பது, டயாபடீஸ், பி.பி. இருப்பது... இதுபோன்ற காரணங்களில் ஏதாவது ஒன்றினால், சுகப்பிரசவ வாய்ப்பு ஆபத்தாகும். அப்படிப்பட்ட சமயங்கள்லதான் சிசேரியன் மூலமா குழந்தை பத்திரமா வெளியில எடுக்கப்படுது'' என்று காரணங்களை விளக்கினார்.
தொடர்ந்து பேசிய டாக்டர் மோகனாம்பாள், ''மருத்துவக் காரணங்கள் தவிர, வேறு சில காரணங்களும் இப்போ சிசேரி யனைத் தீர்மானிக்குது. சில மருத்துவர்கள், சிரத்தை எடுத்து சுகப்பிரசவம் பார்க்கறதுக்கு... சுலபமா சிசேரியன் பண்ணிடலாம்னு நினைக்கறாங்க. அதில் கிடைக்கிற பணமும் அவங்களோட இந்த போக்குக்குக் காரணம். கூடவே, இப்போ எல்லாம் பிரசவ நேரத்துல பெண்ணோட அம்மா, மாமியார், கணவர்னு யாராவது ஒருத்தரை லேபர் வார்டுக்குள்ள விடலாம்னு அரசாங்கமே சொல்லுது. அப்படி வர்றவங்க அந்தப் பொண்ணோட பிரசவ வேதனையைப் பார்க்க முடியாம, 'ஐயோ வேண்டாம்... சிசேரியனே பண்ணிடுங்க...’னு டாக்டர்களை வற்புறுத்துறது பல இடங்கள்ல நடக்குது. இப்படி குடும்பத்தினரோட வேண்டுகோள், வற்புறுத்தலால சுகப்பிரசவமா நிகழவேண்டியது... சிசேரியன் ஆயிடுற ஹிஸ்டரி நிறைய'' என்றார் கவலையுடன்.
'பிரசவ வலி என்பதை, இன்றைய பெண்கள் எதிர்கொள்ள மறுக்கிறார்கள்' என்றொரு குற்றச்சாட்டு இங்கே பரவியிருப்பது பற்றி மகப்பேறு மருத்துவர் கீதாஹரிப்பிரியாவிடம் கேட்டபோது... ''பிரசவ வலி என்பது உச்சகட்ட வலி. என்றாலும், அது பொறுத்துக் கொள்ளக்கூடிய வலிதான். இல்லைனா நம்ம பாட்டிகளும், அம்மாக்களும் எப்படி இத்தனை குழந்தைகள் பெத்திருக்க முடியும்..? கர்ப்ப காலத்துல
Post a Comment