உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமா?---அழகு குறிப்புகள்.,
உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமா? எலுமிச்சை, நார்த்தை செடிகளின் தளிர் இலைகளை, தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை, குளிக்கும் நீ...

எலுமிச்சை, நார்த்தை செடிகளின் தளிர் இலைகளை, தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை, குளிக்கும் நீரில் சேர்த்து கலக்கி குளிக்கலாம். உடலுக்கு புத்துணர்ச்சியும், அழகும் கிடைக்கும். தினமும் தக்காளிச் சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து கழுவலாம்.
தேங்காய் தண்ணீரை, முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரால் கழுவலாம். பாலாடை, எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கழுவலாம். இவ்வாறு செய்து வந்தால், உங்கள் முகம் பொலிவு பெறும்; அழகும் அதிகரிக்கும்.
Post a Comment