விபத்து காப்பீட்டு பாலிசி!---இன்ஷூரன்ஸ்,

விபத்து காப்பீட்டு பாலிசி! பிரிக்க முடியாதது எது? என்ற கேள்விக்கு 'சாலைகளும் விபத்துகளும்’ என்பதுதான் வருத்தமான பதில்.   வாகன...


விபத்து காப்பீட்டு பாலிசி!

பிரிக்க முடியாதது எது? என்ற கேள்விக்கு 'சாலைகளும் விபத்துகளும்’ என்பதுதான் வருத்தமான பதில்.  
வாகனத்தை நாம் சரியாகச் செலுத்தினால்கூட எதிரே வருபவர்கள் தூங்கிக்கொண்டோ, குடித்துவிட்டோ, நிதானம் இல்லாமலோ, தாறுமாறாக வாகனத்தை ஓட்டி வந்தால் ஆபத்துதான். எனக்குத் தெரிந்த ஓட்டுநர் நண்பர் ஒருவர் சொன்னது இது... ''25 வருடமாக விபத்தே இல்லாமல் வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். ஆனால், இது ஒரு வரலாறுதானே தவிர எதிர்காலத்திலும் இப்படியே இருக்க முடியும் என்று என்னால் சொல்ல முடியாது!''
இதுதான் உண்மை. விபத்துகளை நம்மால் மட்டுமே தடுத்துவிட முடியாது. ஏனென்றால், அது நம் கையில் மட்டும் இல்லை. ஆனால் விபத்தின் மூலம் ஏற்படும் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கின்றன பாலிசிகள். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
 எது விபத்து?
பொதுவாக சாலை, ரயில் மற்றும் விமான விபத்துகளைத்தான் நாம் விபத்து என்கிறோம். ஆனால், இந்த பாலிசிகளில் விபத்து என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. நமக்குத் தெரியாமல் நமக்கு ஏற்படும் அசம்பாவிதங்கள் அனைத்துமே விபத்துகள்தான். உதாரணத்துக்கு குளியல் அறையில் வழுக்கி விழுவது, மிருகங்களால் தாக்கப்படுவது மற்றும் தீ விபத்து உள்ளிட்ட அனைத்துமே விபத்துகள்தான். ஆனால், செயற்கையாகவோ, தன்னிலை மறந்த நிலையிலோ இந்தச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கக் கூடாது.
 யாருக்கு கிடைக்கும்?
18 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். (70 வயதுக்கும் மேலே இருப்பவர்களுக்கு அதிக பிரீமியத்துடன் இந்த பாலிசியை எடுக்க முடியும். அதேபோல 18 வயதுக்கு உட்பட்ட நபர்கள் தங்களது பெற்றோர் மூலமே பாலிசி எடுக்க முடியும்). விபத்து என்பது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால், நாம் செலுத்தும் பிரீமியத்தில் எந்தவித வயது வேறுபாடும் இல்லை. அனைவருக்கும் ஒரே பிரீமியம்தான். அதேபோல், எந்தவிதமான மருத்துவப் பரிசோதனைகளும் இல்லை. நீங்கள் இல்லத்தரசியாக இருக்கலாம், பணி செய்யலாம், படிக்கலாம்... இப்படி எந்த நிலையில் இருந்தாலும் உங்களுக்கு பாலிசி கிடைக்கும். எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமலே சில நிறுவனங்களில், ரூ. 10 லட்சம் வரையிலும் இந்த பாலிசி எடுக்க முடியும். அதற்கு மேலும் வேண்டும் என்றால் உங்களது வருமானச் சான்றிதழ் தேவைப்படும். சாதாரண மருத்துவ பாலிசிகளைப் போல் உங்கள் குடும்பம் மொத்தத்துக்கும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
 என்ன கிடைக்கும்?
காப்பீடு செய்துகொண்டவருக்கு உலகில் எங்கு விபத்து நடந்தாலும், க்ளைம் கிடைக்கும். விபத்தினால் உயிர் இழக்கும்பட்சத்தில் பாலிசி தொகை முழுவதும் வாரிசுதாரருக்கு (ஒரு வேளை வாரிசுதாரர் நியமிக்கப்படவில்லை என்றால், சட்டப்படி அவரது வாரிசுக்கு) கிடைக்கும். விபத்தினால் ஒருவர் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகி வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், எடுத்திருக்கும் பாலிசி தொகை முழுவதும் அவருக்குக் கிடைக்கும். ஓர் உறுப்பு மட்டும் முற்றிலும் செயல்படாதபட்சத்தில் பாலிசி தொகையில் குறிப்பிட்ட சதவிகித தொகை கிடைக்கும். உதாரணத்துக்கு ஒரு கண் பார்வை பறிபோய்விட்டால், 50 சதவிகிதத் தொகை கிடைக்கும். அதாவது ரூ. 10 லட்சத்துக்கு பாலிசி எடுத்திருந்தால், ரூ. 5 லட்சம் கிடைக்கும். இந்தப் பட்டியல் மிகப் பெரியது. அதனால், பாலிசி எடுக்கும்போது கவனம் அவசியம்.
ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது முழுமையாகச் செயல்படாத நிலைக்குப் போய்விட்டாலோ, பாலிசி தொகைக்கு ஏற்ப ஒரு வருடத்துக்கு மட்டும் குழந்தைகளின் கல்விக் கட்டணம் மற்றும் ஏற்கெனவே வாங்கி இருக்கும் கடன்களுக்கான மாதாந்திரத் தொகையும் கிடைக்கும். விபத்தின் மூலம் ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கும் கணிசமான தொகை கிடைக்கும். தவிர பாலிசி எடுத்தவரின் இறுதிச் செலவுக்கும்கூட க்ளைம் வாங்கிக்கொள்ள முடியும்.  ஒரு வருடத்தில் க்ளைம் ஏதும் இல்லை என்றால், பாலிசி தொகை ஐந்து சதவிகிதம் வரை உயர்த்தப்படும்.
 வரிவிலக்கு?
இந்த வகை பாலிசிகளில் செலுத்தும் பிரீமியத்துக்கு வரிவிலக்கு கிடையாது. வாங்கும் க்ளைம் தொகைக்கும் வரி கட்டத் தேவையில்லை. பொதுவாக மருத்துவர்கள், 'உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா, ரத்த அழுத்தத்தில் பிரச்னை இருக்கிறதா, ஒவ்வாமை இருக்கிறதா?’ என்றெல்லாம் அடிப்படையான சில கேள்விகளைக் கேட்பார்கள். அதேபோல், ஒரு நிதி ஆலோசகரிடம் நீங்கள் செல்லும்பட்சத்தில், 'உங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா, ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா, ஆக்சிடென்ட் பாலிசி இருக்கிறதா?’ என்றெல்லாம் வரிசையாகக் கேள்வி கேட்பார். இதில் இருந்தே இந்த பாலிசியின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும். அனைவரும் கட்டாயம் எடுக்க வேண்டிய பாலிசி இது!
 தேவையா?
சிலர் டேர்ம் பாலிசி எடுத்திருப்பார்கள். (பாலிசிதாரர் மறைந்தவுடன் பாலிசி தொகை வாரிசுதாரருக்குக் கிடைக்கும்) அதனால், விபத்து காப்பீடு தேவை இல்லை என்று நினைக்கலாம். ஆனால் இந்த பாலிசி நிச்சயம் தேவை. மரணம் ஏற்பட்டால் மட்டுமே டேர்ம் பாலிசியில் க்ளைம் கிடைக்கும். ஆனால், விபத்து நடக்கும் அத்தனை நேரங்களிலும் மரணம் நடக்க வேண்டும் என்றில்லை. நாம் செயல்படாத நேரங்களில் இந்த பாலிசி நமக்குக் கைகொடுக்கும்.
 பிரீமியம் எவ்வளவு?
தனிநபர்களுக்கு 10 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுக்கும்போது, ரூ. 1,500 வரைக்கும் பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும். கணவன் - மனைவிக்கு தலா 10 லட்சம் என்றால், ரூ. 2,800 என்ற அளவில் பிரீமியம் இருக்கும். மேலே சொன்ன இதர சலுகைகள் இல்லாதபட்சத்தில் வருடத்துக்கு ரூ. 1,000-க்கு மட்டும் பிரீமியம் செலுத்தும் பாலிசிகளும் சந்தைகளில் இருக்கின்றன. வருடத்துக்கு ரூ. 1,500 என்றால், மாதத்துக்கு சுமார் ரூ. 125 மட்டுமே!

Related

இன்ஷூரன்ஸ் 8328499359710494294

Post a Comment

2 comments

nagaraj said...

very good, super.iam insurance advisor, i recomend this policy for my policy holders. iam planning to conduct INSURANCE INFORMATION AND AWARENESS CAMPAIGN. any one intrested pls call me.
NAGARAJ, CHENNAI 9840047520,
email nagarajvlic@gmail.com

MohamedAli said...

welcome dear friend NAGARAJ, thanks for your comments by pettagum A.S. Mohamed Ali

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item