ரைஸ் தால் ஸ்டிக்ஸ்
தேவையானவை: அரிசி மாவு - கால் கப், பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன், வறுத்து கரகரப்பாகப் பொடித்த வேர்க்கடலை - கால் கப், வறுத்த வெள்ளை எள் - 4 டேபிள்ஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - கைப்பிடி அளவு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், நறுக்கிய புதினா, கொத்தமல்லி, உப்பு, பொடித்த வேர்க்கடலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து, விரல் அளவு நீளத்தில் உருட்டி, வறுத்த வெள்ளை எள்ளில் ஒரு முறை புரட்டி எடுக்கவும். இப்படி ஒவ்வொரு 'ஸ்டிக்கை’யும் தயார் செய்யவும். அவற்றை சூடான எண்ணெயில் போட்டு சிவக்கப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.
ஒரு கப்பில் சிறிதளவு பொரித்த 'ரைஸ் தால் ஸ்டிக்ஸ்' போட்டு, அதன் மேல் தயிர், கரம் மசாலாத்தூள் சேர்த்தும் சாப்பிடலாம்.
ரைஸ் தால் ஸ்டிக்ஸ்: சிறிதளவு கசகசா சேர்த்து மாவுடன் பிசைந்து செய்தால் சுவை கூடும்.
Post a Comment