ஷீர் கொர்மா -ரம்ஜான் ஸ்பெஷல் ரெசி்பி !-
ஷீர் கொர்மா தேவையானவை: ஷீர் கொர்மா (வறுத்த சேமியா) - 100 கிராம், பால் - ஒன்றரை லிட்டர், சர்க்கரை - தேவைக்கு ஏற்ப, முந்திரி - 25 கிராம்...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_8752.html
ஷீர் கொர்மா
தேவையானவை: ஷீர் கொர்மா (வறுத்த சேமியா) - 100 கிராம், பால் - ஒன்றரை லிட்டர், சர்க்கரை - தேவைக்கு ஏற்ப, முந்திரி - 25 கிராம், பாதாம் - 25 கிராம், திராட்சை - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: முந்திரி, பாதாமை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பாதியாக சுண்டும்படி காய்ச்சி தனியே எடுத்து கொள்ளவும். கடாயில் சிறிது நெய்யை ஊற்றி, முந்திரி, பாதாம் மற்றும் திராட்சையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு, வாய் அகன்ற பாத்திரத்தில் மீதியுள்ள நெய்யை விட்டு காய்ந்ததும், சேமியாவை அதில் சேர்த்து நன்கு புரட்டவும். பிறகு, காய்ச்சி சுண்டிய பாலை அதில் ஊற்றி... சேமியா கட்டியாகிவிடாமல், அதேநேரம் நன்கு வேகும் வரை கலக்கவேண்டும். வெந்த பின், தேவைக்கேற்ப சர்க்கரையைச் சேர்த்து, அது கரையும் வரை கலக்கவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, அதன் மீது ஏலக்காய்த்தூள் தூவினால்... ஷீர் கொர்மா தயார். பரிமாறும்போது நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாமைச் சேர்க்கவும்.
குறிப்பு: இதை சூடாகவும் சாப்பிடலாம். ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து கூலாகவும் சாப்பிடலாம். இத்துடன் கேசரி பவுடர் சேர்த்தால்... ஷீர் அழகான நிறத்தில் ஜொலிக்கும்!
Post a Comment