ஆட்டு ஈரல் சூப்:-உடலுக்கு வலிவு தரும் சூப்கள்
ஆட்டு ஈரல் சூப்: ஆட்டு ஈரல் கால் கிலோ எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் 10 உரித்து வெட்டிக் கொள்ளவும், தனியா, மிளகு, ...
https://pettagum.blogspot.com/2011/11/blog-post_5109.html
ஆட்டு ஈரல் சூப்: ஆட்டு ஈரல் கால் கிலோ எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் 10 உரித்து வெட்டிக் கொள்ளவும், தனியா, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் - பாதி, தக்காளி 1, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தேவையான அளவு. தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும். அரிசி களைந்த தண்ணீரை குக்கரில் ஊற்றி அதில் ஈரல் துண்டுகள், அரைத்த பொடி, வெங்காயத்தை தனியாக வதக்கி அரைத்து இத்துடன் சேர்க்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியில் மிளகுத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்கள் வாரம் ஒரு முறை இதை அருந்தலாம்.
Post a Comment