புதினா துவையல்...சமையல் குறிப்புகள்
புதினா துவையல் பொதுவாக, புதினாவினை வதக்கி செய்யும் துவையல் மிகவும் ருசியாக சுவையாக இருக்கும்..ஆனால், புதினா வதக்கி செய்வதால் அதில் உள்ள ச...

https://pettagum.blogspot.com/2011/10/blog-post_194.html
புதினா துவையல்
பொதுவாக, புதினாவினை வதக்கி செய்யும் துவையல் மிகவும் ருசியாக சுவையாக இருக்கும்..ஆனால், புதினா வதக்கி செய்வதால் அதில் உள்ள சத்துகள் குறைந்துவிடுகின்றது-அதனால் புதினாவினை வதக்கி செய்வதினை தவிர்ப்பது நல்லது-.
தேவையான பொருட்கள் :
· சுத்தம் செய்த புதினா இலை - 1 கப்
· கொத்தமல்லி + கருவேப்பில்லை - 1 கப்
· தேங்காய் துறுவல் - 1/4 கப் (விரும்பினால் சேர்க்கவும்)
· புளி, இஞ்சி - சிறிதளவு
· உப்பு - தேவையான அளவு
வறுத்து கொள்ள வேண்டிய பொருட்கள் :
· கடுகு - 1/2 தே.கரண்டி
· உளுத்தம் பருப்பு - 2 மேஜை கரண்டி
· கடலை பருப்பு - 2 மேஜை கரண்டி
· காய்ந்த மிளகாய் - 4
· பெருங்காயம் - 1/2 தே.கரண்டி
· எண்ணெய் - 1 தே.கரண்டி
செய்முறை :
புதினா + கொத்தமல்லி + கருவேப்பில்லை சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு + காய்ந்த மிளகாய் ,பெருங்காயம் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
வறுத்த பொருட்கள் + புதினா + கொத்தமல்லி ,கருவேப்பில்லை + தேங்காய் துறுவல் + புளி, இஞ்சி + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
சுவையான சத்தான புதினா துவையல் ரெடி.இதனை தயிர் சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சாதத்துடன் புதினாவை நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
************************************
புதினாவில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. புதினாவினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள், ஜீரணம் எளிதில் செய்ய உதவுகின்றது. பசியினை தூண்டுகின்றது. இரத்ததினை சுத்தம் செய்து உடலினை ஆரோக்கியத்துடன் இருக்க செய்கின்றது. வாய் தூற்நாற்றத்தினை அகற்றுகின்றது-
(பல Chewing Gums புதினா சேர்த்து இருப்பதை பலரும் கவனித்து இருப்போம்-)
உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. புதினாவில், அதிக அளவு நார்சத்து, விட்டமின்ஸ் ஏ & சி(Vitamins A & C) காணப்படுகின்றது. அத்துடன், பிரோட்டின்(Protien), விட்டமின் பி1(Vitamin B1 - Thiamin), விட்டமின் பி3(Vitamin B3 -
Niacin), விட்டமின் பி6 (Vitamin B6) மற்றும் Calcium, Iron, Phosphorous, Zinc போன்றவை இருக்கின்றது. புதினாவில் கொழுப்பு சத்து மற்றும் கொலஸ்டிரால் மிகவும் குறைவு. விட்டமின்ஸ் B1, B3, B6 மற்றும் விட்டமின் C தண்ணீரில் கரையும் விட்டமின்ஸ்(Water Soluble Vitamins) என்பதால், இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது இதனை சாப்பிடுவது மிகவும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
உடல் எடையினை குறைக்க விரும்புவோர் புதினாவினை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. சரி, புதினாவினை பற்றி சிறிதளவு தெரிந்து கொண்டோம்.. புதினா துவையலினை செய்து பார்த்து கருத்தினை தெரிவிக்கவும்.
Post a Comment