தந்தூரி சிக்கன்--சமையல் குறிப்புகள்
தந்தூரி சிக்கன் தேவையானப் பொருட்கள்: சதைபற்றான கோழி-1kl வெங்காயம்-1 பச்சைமிளகாய்-5 இஞ்சி- 2அங்குல துண்டு பூண்டு- 10 பல் க...

https://pettagum.blogspot.com/2011/10/blog-post_8440.html
தந்தூரி சிக்கன்
தேவையானப் பொருட்கள்:
சதைபற்றான கோழி-1kl
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-5
இஞ்சி- 2அங்குல துண்டு
பூண்டு- 10 பல்
கரம் மசலாப்பொடி-1teasp
ஜீரகப்பொடி-1teasp
மஞ்சள் பொடி-1teasp
மிளகாய்ப்பொடி-1teasp
தயிர்-1 மேஜைக்கரண்டி
உப்பு தேவையானது
எண்ணெய்-1/4lt
ஆரஞ்சுகலர்பொடி-1 சிட்டிகை
செய்முறை:
முதலில் கோழியை கழுவி சுத்தம் செய்து சின்ன துன்டங்கள்செய்யவும்,நீரைபிழிந்து அதில் எல்லா மசாலாபொருட்க்களையும் சேர்க்கவும் இஞ்சிபூண்டை தோல்நீக்கி அரைத்து அதில் சேர்க்கவும்,வெங்காயம்,பச்சைமிளகாயெய் நீளமாக நறுக்கிபோடவும் தயிரயும் உப்பயும் கலர்ப்பொடியயும் சேர்த்து பிசறி வைக்கவும் ,இது குறைந்தது 2 மணி நேரம் ஊரவேண்டும்.
பின்பு ஒரு வானலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கோழிதுண்டங்களை வெங்காயம் மிளகாயுடன் சேர்த்து எண்ணெய்யில் போடவும்,மிதமான தீயில் சிவக்க வறுத்துஎடுக்கவும்.சுவையான தந்தூரி தயார்.
Post a Comment