கோதுமை ரவா இட்லி தேவையான பொருட்கள் : · கோதுமை ரவை - 3 கப் · உளுத்தம் பருப்பு - 1/2 கப் · வெந்தயம் - 1 தே.கரண்டி · ...

கோதுமை ரவா இட்லி
தேவையான பொருட்கள் :
· கோதுமை ரவை - 3 கப்
· உளுத்தம் பருப்பு - 1/2 கப்
· வெந்தயம் - 1 தே.கரண்டி
· உப்பு - தேவையான அளவு
செய்முறை :
· உளுத்தம்பருப்பு + வெந்தயம் சேர்த்து 1 - 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
· ஊறவைத்த பருப்பினை மைய அரைத்து கொள்ளவும்.
· அரைத்த மாவு + கோதுமை ரவை + உப்பு + சிறிது தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
· இந்த மாவினை குறைந்த்து 5 – 6 மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு இட்லியினை சுடவும். சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி ரெடி.
கவனிக்க:
ரவையினை தனியாக தண்ணீரில் ஊறவைக்க கூடாது.
அரைத்த மாவுடன் தான் ரவையினை சேர்த்து ஊறவைக்கவும். அப்பொழுது தான் இட்லி வரும்.
மிக்ஸியில் அரைப்பதானால் 1/2 கப் உளுந்து சேர்த்து கொள்ளவும். இதுவே grinderயில் அரைத்தால் 1/2 கப்பிற்கும் குறைவாக உளுத்தம்பருப்பினை சேர்த்து கொள்ளவும்.
-------------------------------------------------------------------------------------------
இந்தியன் கடைகளில் கிடைக்கும் உடைத்த கோதுமை தான்...
அதாவது இரண்டு விதம் இருக்கும்..ஒன்று பெரியதாக உடைத்தது...இன்னொன்று பொடியாக ரவையை விட சிறிது பெரிசாக இருக்கும்...இதில் நான் உபயோகித்து இருப்பது இரண்டவது வகை...
முதல் வகையில்...கோதுமை ஒன்றும் பாதியுமாக கிடைக்கும்..அதனை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து,கொரகொரவென மாவாக அரைத்து, உளுத்தம்மாவுடன் சேர்த்து புளிக்கவைத்து இட்லி செய்யவும்.
இரண்டாம் வகை கோதுமை ரவையினை உளுத்தம்மாவுடன் சேர்த்து ஊறவைத்தால் போதும்..தனியாக ஊறவைக்கவேண்டாம்...
முதல் வகையில்...கோதுமை ஒன்றும் பாதியுமாக கிடைக்கும்..அதனை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து,கொரகொரவென மாவாக அரைத்து, உளுத்தம்மாவுடன் சேர்த்து புளிக்கவைத்து இட்லி செய்யவும்.
ரவையினை எப்பொழுதும் உளுந்துடன் ஊறவைக்க கூடாது....உளுந்தினை மைய அரைக்க வேண்டும்..ரவையினை கொரகொரவென அரைக்க வேண்டும்..அதனால் தனி தனியாக ஊறவைக்கவும்...
Post a Comment