பட்டர் சிக்கன் தேவையானவை சிக்கன் - ஒரு கிலோ (தோல் எலும்பு நீக்கி சதுரமாக நறுக்கவும்.) வெண்ணெய் - 75 கிராம் கார்ன் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன...

பட்டர் சிக்கன்
தேவையானவை
சிக்கன் - ஒரு கிலோ (தோல் எலும்பு நீக்கி சதுரமாக நறுக்கவும்.)
வெண்ணெய் - 75 கிராம்
கார்ன் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 நறுக்கியது
மிளகாய்த்தூள் - 11/4 டீஸ்பூன்
யோகர்ட் - 150 மில்லி
பாதாம் (அரைத்தது) - 50 கிராம்
பிரியாணி இலை - 1/4 டீஸ்பூன்
லவங்கம் தூள் - ஒரு டீஸ்பூன்
ஏலக்காய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்
தக்காளி (கேனில் அடைக்கப்பட்டது) - 400 கிராம்
உப்பு - 11/4 டீஸ்பூன்
க்ரீம் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* அகலமான பவுலில் சுத்தம் செய்த சிக்கனைப் போடவும்.
* யோகர்ட், பாதாம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மசாலா சாமான்கள் போதுமான உப்பு சேர்த்து பவுலில் போட்டு நன்கு அடித்துக் கலக்கவும். இந்தக் கலவையை சிக்கன் மேல் ஊற்றி தனியே வைக்கவும்.
* கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும்.
* வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடங்கள் வறுக்கவும். சிக்கன் துண்டுகளை இதனுடன் சேர்த்து 7-லிருந்து 10 நிமிடங்கள் வறுக்கவும்.
* பாதி கொத்தமல்லி இலை, கிரீம் சேர்த்துக் கிளறி சிக்கனை நன்கு வேக வைக்கவும். வெந்த பிறகு மீதமுள்ள கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்து பட்டர் சிக்கனைப் பரிமாறவும்.
**********************************************************************
Post a Comment