மட்டன் கட்லெட் தேவையான பொருள்கள்: கொத்துகறி - கால் கிலோ உருளைகிழங்கு...
மட்டன் கட்லெட்
தேவையான பொருள்கள்:
கொத்துகறி - கால் கிலோ
உருளைகிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - கால் கிலோ
இஞ்சி,பூண்டு பேஸ்ட் - சிறிதளவு
முட்டை - 1
ரொட்டி தூள் - சிறிதளவு
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
கரம்மசாலா - 2 ஸ்பூன்
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கி இஞ்சி,பூண்டு பேஸ்ட் , மிளகாய்தூள் ,கரம்மசாலா சேர்த்து வதக்கி கொத்துகறியையும் போட்டு ந்னகு வதக்கி உப்பும்,சிறிதளவு தண்ணீரும் சேர்த்து கறியை வேக வைக்கவும்.
இதனை ஆறவைத்து வேகவைத்த உருளை கிழங்கை மசித்து சிறிது உப்பும் சேர்த்து எல்லாவற்றையும் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பின்பு வட்டமாக தட்டி முட்டைவெள்ளைகருவை மட்டும் நன்கு அடித்து அதில் முக்கி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி இரண்டுபுறமும் திருப்பி போட்டு சிவந்தவுடன் இறக்கவும்.
Post a Comment