மதுரை ஸ்பெஷல் மட்டன் பிரியாணி--சமையல் குறிப்புகள்
மதுரை ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தேவையான பொருள்கள்: மட்டன்- 3/4 கிலோ, பிரியாணி அரிசி – 1 கிலோ, பெரிய வெங்காயம் – 1/4 கிலோ, தக்காளி – 1/2 ...

மதுரை ஸ்பெஷல் மட்டன் பிரியாணி
தேவையான பொருள்கள்:மட்டன்- 3/4 கிலோ, பிரியாணி அரிசி – 1 கிலோ, பெரிய வெங்காயம் – 1/4 கிலோ, தக்காளி – 1/2 கிலோ பச்சை மிளகாய் – 8 , புதினா, கொத்தமல்லி இலை – ஒரு கப் (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சம்பழம் – 2 , தயிர் – 1 கப், இஞ்சி – 100 கிராம், பூண்டு – 100 கிராம், எண்ணெய் – 400 மி.லி., கறி மசாலா – 5 டீஸ்பூன், மிளகாய் தூள் – 3 டீஸ்பூன் , தனியாதூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன், டால்டா – 100 கிராம், உப்பு – தேவைக்கேற்ப, கேசரிப்பவுடர்-சிறிதளவு, ஏலக்காய் – 4 ,கிராம்பு -6 , பட்டை சிறுதுண்டு செய்முறை: வெங்காயம், பச்சைமிளகாய் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுதாக்கிக் கொள்ளவு-ம். மட்டனை சுத்தம் செய்து, தேவைக்கேற்ற அளவில் வெட்டிக் கொள்ளவும். குக்கரில் மட்டனுடன் இஞ்சி, பூண்டு விழுதையும் உப்பையும் சேர்த்து வேகவிடவும். அரிசியை சுத்தம் செய்து நீர் ஊற்றி ஊற விடவும் அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய் தூள், தனியாதூள், கறி மசாலா, தயிர் சேர்த்து வேக வைத்த கறியைக் கொட்டிக் கிளறவும். இத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும். ஒரு கிலோ அரிசி வேகும் அகலமான பாத்திரத்தில் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். சாதம் முக்கால் வேக்காடு வெந்தபின் வடித்து விடவும். இத்துடன் வேக வைத்துக் கிளறிய கறி மசால் கலவையைச் சேர்க்கவும். கடைசியில் எலுமிச்சம் பழச்சாறு, டால்டா ஊற்றி, பாத்திரத்திலிருந்து ஆவி வெளியேறா வண்ணம் இறுக்கமாக மூடி சிறிது நேரம் குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் கழித்து மட்டன் பிரியாணியை கிளறி எடுத்தால் சுவையான பிரியாணி தயார்
Post a Comment