வாசகிகள் கைமணம்! அவல் லெமன் கிச்சடி
தேவையானவை: அவல் & ஒன்றரை கப், வறுத்த நிலக்கடலை & 2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள், கறுப்பு எள், மஞ்சள்தூள் & தலா அரை டீஸ்பூன், சாம்ப...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_9871.html
தேவையானவை: அவல் & ஒன்றரை கப், வறுத்த நிலக்கடலை & 2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள், கறுப்பு எள், மஞ்சள்தூள் & தலா அரை டீஸ்பூன், சாம்பார்தூள் & 2 டீஸ்பூன், தனியாதூள் & 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) & முக்கால் கப், தேங்காய் துருவல் & 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு & 3 டேபிள்ஸ்பூன், நன்கு பழுத்த தக்காளி & 5, நறுக்கிய பச்சை மிளகாய் & ஒன்றரை டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன், உப்பு & தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு & தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை & ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அவலை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ரவை போலப் பொடித்துக்கொள்ளவும். நிலக்கடலையைத் தோல் நீக்கி, கரகரப்பாகப் பொடிக்கவும். எள்ளையும் தேங்காய் துருவலையும் வெறும் வாணலியில் சிவப்பாக வறுத்துக் கொள்ளவும்.
தக்காளிப் பழங்களை சிறிது நேரம் வெந்நீரில் போட்டெடுத்து, தோலை உரித்து ஜூஸ் எடுக்கவும். அதனுடன் வெல்லத்தூள், தனியாதூள், சாம்பார்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, பொடித்த அவலையும் கலக்கவும். அரை மணி நேரம் இந்தக் கலவையை ஊறவைக்கவும்.
தக்காளி ஜூஸ§டன் தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். மீதி எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அத்துடன் ஊறவைத்த அவல் கலவை சேர்த்துக் கிளறவும். உதிர், உதிராக வரும்போது, மல்லித்தழை சேர்த்து இறக்கவும். எலுமிச்சம்பழச் சாறைக் கலந்து பரிமாறவும்.
அவல் லெமன் கிச்சடி: ஒரு டீஸ்பூன் தனியா, 2 காய்ந்த மிளகாய், கால் டீஸ்பூன் வெந்தயம் மூன்றையும் வறுத்து, கரகரவென்று பொடித்து, இறக்குவதற்கு முன் தூவினால் வாசம் பிரமாதமாக இருக்கும்.
Post a Comment