சமையல் குறிப்புகள்! போளி, பூரணம் கெட்டியாக எப்படிச் செய்வது?
எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து செய்தாலும் போளி, பூரணம் கெட்டியாக வருவதில்லை. சற்று நீர்த்து விடுகிறது. எப்படிச் செய்தால் பூரணம் கெட்டியாக இ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3953.html
எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து செய்தாலும் போளி, பூரணம் கெட்டியாக வருவதில்லை. சற்று நீர்த்து விடுகிறது. எப்படிச் செய்தால் பூரணம் கெட்டியாக இருக்கும்?
இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஒரு டம்ளர் கடலைப் பருப்பை மெத்தென்று அமுங்கும்படி வேக வைக்கவும். வெந்த பருப்பில் 2 கப் தேங்காய்த் துருவல், 300 கிராம் வெல்லம் இரண்டையும் சேர்த்து கெட்டியாகத் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அரைத்த விழுதை, கனமான கடாயில் போட்டு அடிபிடிக்காமல் கிளறி, உருட்டும் பதத்தில் பூரணம் தயார் செய்தால், கெட்டியாக வரும்
Post a Comment