சமையல் குறிப்புகள்! வாழைப்பூ உருண்டைக் குழம்பு
தேவையான பொருள்கள் : எண்ணெய் - சிறிது, பச்சை மிளகாய் (அரைத்தது) - 1 டேபிள் ஸ்பூன், தக்காளி (அரைத்தது) - 1 கப், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3865.html
தேவையான பொருள்கள் :
எண்ணெய் - சிறிது,
பச்சை மிளகாய் (அரைத்தது) - 1 டேபிள் ஸ்பூன்,
தக்காளி (அரைத்தது) - 1 கப்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
தேங்காய் முந்திரி(அரைத்தது) - 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
புளித் தண்ணீர் - அரை கப்
தேவையானவை :
கடலைப் பருப்பு -150 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
இஞ்சி - சிறிது,
பச்சை மிளகாய் (சிறிதாக நறுக்கியது) - 2,
சீரகம், சோம்பு - 5 கிராம்,
பூண்டு - 2 பற்கள்,
வாழைப்பூ (சிறிதாக நறுக்கியது) - 100 கிராம்
செய்முறை :
கடலைப் பருப்பை ஊற வைத்து, அதில் சிறிதாக நறுக்கிய பொரிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றுடன் சோம்பு, சீரகம் மற்றும் வாழைப்பூ சிறிதாக நறுக்கியது சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். அதனை சிறிது அரைத்து உருண்டைகளாகப் பிடித்து, இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவைக்க வேண்டும்.
ஒரு கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு அதில் பச்சை
மிளகாய், தக்காளி அரைத்ததைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில்
இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதங்கியபின் அதில் சிறிது மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அதில் புளித்தண்ணீரைச் சேர்த்து நன்றாகக்
கலக்கிக் கொதிக்கவிடவும்.
தேவையான உப்பு, வேகவைத்த உருண்டையைச் சேர்த்து உருண்டை உடையாமல் நன்றாகக் கலக்கி இறக்கினால் வாழைப்பூ உருண்டைக் குழம்பு தயார்!
Post a Comment