சமையல் குறிப்புகள்! கலப்பு வெஜிடபிள் குழம்பு
பல்வேறு வகையான காய்கறிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் `மிக்ஸ்டு வெஜிடபிள் குழம்பை' தயாரித்து ருசியுங்கள். தேவைப்படும் பொருட்கள்: * ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2090.html
பல்வேறு வகையான காய்கறிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் `மிக்ஸ்டு வெஜிடபிள் குழம்பை' தயாரித்து ருசியுங்கள்.
தேவைப்படும் பொருட்கள்:
* கேரட்- 150 கிராம்.
* பீன்ஸ்- 150 கிராம்.
* பச்சைக் கடலை- 150 கிராம்.
* காலிபிளவர்- 200 கிராம்.
* ரிபைண்ட் ஆயில்- 50 மி.லி.
* சீரகம்- அரை தேக்கரண்டி.
* கறிமசால் வகை- ஒரு தேக்கரண்டி.
* பெ.வெங்காயம்- 200 கிராம்.
* இஞ்சி- இரண்டு துண்டு.
* பூண்டு- ஒன்று.
* தக்காளி- இரண்டு.
* மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி.
* மிளகாய்த்தூள்- ஒரு தேக்கரண்டி.
* உப்பு- தேவைக்கு.
* கறிமசால் தூள்- அரை தேக்கரண்டி.
* மல்லி இலை- சிறிதளவு.
* நறுக்கிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி.
* நறுக்கிய ப.மிளகாய்- ஒரு தேக்கரண்டி.
செய்முறை:
- கேரட், பீன்ஸ் ஆகியவைகளை ஒரு செ.மீட்டர் அளவிற்கு துண்டுகளாக நறுக்குங்கள். காலிபிளவரை ஒவ்வொரு பூவாக அடர்த்தி எடுங்கள்.
- பெ.வெங்காயத்தை அரையுங்கள். இஞ்சி, பூண்டுவையும் அரைத்துவையுங்கள். தக்காளியையும் அரையுங்கள். மல்லிஇலையை நறுக்கி வையுங்கள்.
- கெட்டியான பாத்திரத்தில் எண்ணையை சூடாக்குங்கள். அதில் சீரகம், கறிமசால் இரண்டையும் வறுக்கவும். அதில் பெ.வெங்காயத்தை கொட்டி பொன்னிறம் ஆகும்வரை வறுக்கவும். அதில் இஞ்சி, பூண்டு அரைப்பையும் சேர்த்துக் கிளறுங்கள். தக்காளி அரைப்பையும் சேர்த்து மூன்று நிமிடங்கள் கிளறுங்கள். அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போன்றவைகளையும் சேருங்கள்.
கேரட், பீன்ஸ், பச்சைக்கடலை, காலிபிளவர் ஆகியவைகளை ஒன்றாக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள். கொதித்ததும் தீயை லேசாக எரியவிட்டு மூடிவைத்து வேகவிடுங்கள். அத்தோடு உப்பும், கறிமசால் தூளும் சேருங்கள். எல்லாவற்றையும் கிளறி இறக்குங்கள். நறுக்கிய மல்லிஇலை, மிளகாய் ஆகியவைகளைச் சேர்த்து அலங்கரியுங்கள்.
Post a Comment