சமையல் குறிப்புகள்! சோயாவடை
தேவையானவை: சோயா பீன்ஸ் & ஒரு கப், பிரெட் & 2 ஸ்லைஸ், பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் & அரை கப், பச்சைமிளகாய் & 3, இஞ்சி&...
https://pettagum.blogspot.com/2011/03/2-3.html
தேவையானவை: சோயா பீன்ஸ் & ஒரு கப், பிரெட் & 2 ஸ்லைஸ், பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் & அரை கப், பச்சைமிளகாய் & 3, இஞ்சி&பூண்டு விழுது & ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, எண்ணெய் & தேவையான அளவு.
செய்முறை: பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். முதலில் சோயாவை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பாதி வெந்தபிறகு, இறக்கி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். ஒரு நிமிடம் அரைத்தால் போதும். இரண்டு பிரெட் துண்டுகளை பாலில் அல்லது தண்ணீரில் நனைத்து, மிக்ஸியில் போட்டு (?) மீண்டும் அரை நிமிடம் அரைத்-தெடுக்கவும். கடைசியில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி&பூண்டு விழுது, உப்பு, மிளகுத் தூள், எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, சிறு சிறு வடைகளாகத் தட்டி குழிவான நான்&-ஸ்டிக் தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி, ‘ஷேலோ ஃப்ரை’ செய்து (அதிக எண்ணெய் தேவைப்படாத ஃப்ரை இது. இருபுறமும் திருப்பி, நன்கு வேக வைக்கவும்) எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம்.
சோயா வடை: பிரெட் துண்டுகளுக்கு பதில் உருளைக்கிழங்கை வேகவைத்து, மசித்துச் சேர்த்தும் வடை செய்யலாம்.
Post a Comment