சமையல் குறிப்புகள்! கத்திரி உருளை மசாலா
தேவையான பொருள்கள் : கத்திரிக்காய் - 2, உருளைக்கிழங்கு - 2, முந்திரி - 50 கிராம், மஞ்சள் தூள் - சிறிது, பச்சை மிளகாய் - 5, சீரகம் - 1 டேபிள் ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_692.html
தேவையான பொருள்கள் :
கத்திரிக்காய் - 2,
உருளைக்கிழங்கு - 2,
முந்திரி - 50 கிராம்,
மஞ்சள் தூள் - சிறிது,
பச்சை மிளகாய் - 5,
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பாதாம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,
பிஸ்தா - 2 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - சிறிது.
செய்முறை :
முந்திரி 30 கிராம் நன்றாக ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கைச் சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
கத்திரிக்காயையும் சிறிதாக வெட்டி அதனை எண்ணெயில் சிறிது நேரம் வறுத்துக் கொள்ளவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் நன்றாக எண்ணெய் ஊற்றி அதில் சிறிது சீரகத்தைச் சேர்த்து, பொ¡¢ந்த பின் அரைத்த முந்திரியை அதில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைக்கவும். மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு போடவும்.
பின்னர் பொரித்த காய்கறிகளைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதனுடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
பின்னர் பாதாம், பிஸ்தா மற்றும் மீதமுள்ள முந்திரி ஆகியவற்றைப் பொன்னிறமாகப் பொரித்து அதனுடன் சேர்த்தால் கத்திரி உருளை மசாலா ரெடி.
Post a Comment