சமையல் குறிப்புகள்! மசாலா பப்பட்
தேவையானவை: மைதா மாவு & ஒரு கப், கடலை மாவு & அரை கப், இஞ்சி&பூண்டு விழுது & அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் & அரை டீஸ்பூன்,...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8712.html
தேவையானவை: மைதா மாவு & ஒரு கப், கடலை மாவு & அரை கப், இஞ்சி&பூண்டு விழுது & அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் & அரை டீஸ்பூன், மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், நெய் & 2 டீஸ்பூன், அரிசி மாவு & 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா &அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை & ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் & தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, இஞ்சி&பூண்டு விழுது, மசாலா தூள், மிளகாய்தூள், கீரை, மல்லித்தழை, புதினா ஆகியவற்றுடன் நெய், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவுபோல் பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக் கல்லில் வைத்து அரிசி மாவை இருபுறமும் தேய்த்து மெல்லிசாகத் திரட்டவும். மிதமான தீயில் எண்ணெயைக் காயவைத்து அதில் போட்டு, எடுத்து பரிமாறவும். மாலை நேரத்தில் செய்து சாப்பிட மிகவும் உகந்த சுவையான சிற்றுண்டி இது!
Post a Comment