பருப்புத் துவையல் முதல் வகை: தேவையானவை: துவரம்பருப்பு 1 கப் மிளகு 2 டேபிள்ஸ்பூன் உப்பு தேவையானது எண்ணைய் 1 டீஸ்பூன் செய்முறை: துவர...
முதல் வகை:
தேவையானவை:
துவரம்பருப்பு 1 கப்
மிளகு 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணைய் 1 டீஸ்பூன்
செய்முறை:
துவரம்பருப்பையும் மிளகையும் வாசனை வரும்வரைஎண்ணையில் வறுத்து உப்பு வைத்து
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு அரைக்கவேண்டும்.
நன்றாக பருப்பு மசிந்து மையாக ஆகும்வரை அரைக்கவேண்டும்.
இரண்டாம் வகை:
தேவையானவை:
துவரம்பருப்பு கால் கப்
கடலைபருப்பு கால் கப்
தேங்காய்த்துருவல் 2 tblsp
வற்றல் மிளகாய் 6
உப்பு தேவையானது
செய்முறை:
துவரம்பருப்பு,கடலைப்பருப்பு,மிளகாய்வற்றல் மூன்றையும் கொஞ்சம் எண்ணையில் வறுத்துக்கொண்டு உப்பு தேங்காய் துருவல் வைத்து
அரைக்கவேண்டும்.
சனிக்கிழமை..சீரகம்-மிளகு ரசமும்..பருப்புத்துவையலையும் சாப்பிட்டால்.. ஞாயிறு அன்று ஸ்பெஷல் சாப்பாட்டிற்கு வயிறு தயாராகிவிடும்.
Post a Comment