ஓட்ஸ் சர்க்கரைப் பொங்கல் :--சமையல் குறிப்புகள்
ஓட்ஸ் சர்க்கரைப் பொங்கல் : தேவையானவை: ஓட்ஸ் 1 கப் பயத்தம்பருப்பு 1/4 கப் பொடித்த வெல்லம் 3/4 கப் முந்திரிபருப்பு 10 திராட்சை 10 நெய் 1/4 ...

https://pettagum.blogspot.com/2011/10/blog-post_8088.html
ஓட்ஸ் சர்க்கரைப் பொங்கல் :
தேவையானவை:
ஓட்ஸ் 1 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
பொடித்த வெல்லம் 3/4 கப்
முந்திரிபருப்பு 10
திராட்சை 10
நெய் 1/4 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் 1/2 டீஸ்பூன்
பால் 1/4 கப்
செய்முறை:
பயத்தம்பருப்பை குக்கரில் வைத்து நன்கு குழைய வேகவிடவேண்டும். (4 விசில்
)தனியே எடுத்துவைக்கவும். வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவேண்டும். ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு முதலில்
முந்திரிபருப்பையும்,திராட்சையையும் சிறிது நெய்யில் வறுத்து
வைக்கவேண்டும்.அதே வாணலியில் ஓட்ஸை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கப்
தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன் ஓட்ஸை சேர்த்து
கிளறவேண்டும்.ஓட்ஸ் நன்றாக வெந்ததும் தயாராக உள்ள வெந்த பயத்தம்பருப்பை சேர்த்து கிளற வேண்டும். பின்னர் வடிகட்டிய வெல்லத்தையும் மீதமுள்ள நெய்யுடன் இந்த கலவையில் சேர்க்கவேண்டும்.
ஓட்ஸ், பயத்தம்பருப்பு,வெல்லம்,நெய் எல்லாம் நன்கு சேரும்வரை
அடிபிடிக்காமல் கிளறவேண்டும். பொதுவானவை
அடுப்பை தணித்து பாலில் கேசரிப்பவுடரைக் கலந்து ஓட்ஸ்
சர்க்கரைப்பொங்கலில் கலக்கவேண்டும்.
கடைசியில் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கவேண்டும்.
Post a Comment