தக்காளி வத்தல்--சமையல் குறிப்புகள்
தக்காளி வத்தல் தேவையான பொருட்கள்: தக்காளி - 1 கிலோ மஞ்சள் தூள...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_3674.html
தக்காளி வத்தல்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1 கிலோ
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சற்று காயாக இருக்கும் தக்காளியை ஆறு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டுங்கள். அவற்றில் உள்ள விதைகளை நீக்கி விடுங்கள்.
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு மூன்றையும் கலந்து கொண்டு வெட்டிய தக்காளி துண்டுகளுடன் சேர்த்துக் கலக்குங்கள்.
இவற்றை வெயிலில் நன்றாக காய வைத்து எடுங்கள். சற்று கடினமாக மாறியதும் எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் பத்திரப்படுத்துங்கள்.
தேவையான போது இந்த வத்தலை, மோர் மிளகாயை வறுப்பது போல எண்ணெயில் வறுத்து சுவைக்கலாம்.
Post a Comment