திருச்சி 'பெரிய பூந்தி’!--சமையல் குறிப்புகள்
திருச்சி 'பெரிய பூந்தி’! தேவையான பொருட்கள்: ஸ்பெஷல் நயம் கடலை மாவு (ஃபர்ஸ்ட் குவாலிட்டி கடலை மாவு. எல்லா கடைகளிலும் கிடைக்கும்) - ஒரு...
திருச்சி 'பெரிய பூந்தி’!
தேவையான பொருட்கள்: ஸ்பெஷல் நயம் கடலை மாவு (ஃபர்ஸ்ட் குவாலிட்டி கடலை மாவு. எல்லா கடைகளிலும் கிடைக்கும்) - ஒரு கிலோ, சர்க்கரை- 3 கிலோ, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, கம்பி பதத்தில் பாகு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். கடலை மாவை நன்றாகச் சலித்து, சோடா உப்பை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, கெட்டித் தயிருக்கான பதத்தோடு பிசைந்துகொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெயைக் காய வைக்க வேண்டும். பெரிய ஓட்டைகள் கொண்ட ஜாரணியில் (சல்லிக் கரண்டி) மாவுக் கரைசலை ஊற்ற வேண்டும். பொன்னிறமாக சிவந்து வரும் பூந்திகளை எடுத்துப் பாகில் ஊற வைக்க வேண்டும்.
Post a Comment