கொத்தமல்லி தழை சட்னி--சமையல் குறிப்புகள்
ஹோட்டல் சட்னி தேவையானவை: வெங்காயம் 1 தக்காளி 1 பூண்டு 4 பல் பச்சைமிளகாய் 4 கொத்தமல்லி தழை 1 கப் (ஆய்ந்தது) உப்பு,எண்ணைய் தேவையானவை தாளி...

https://pettagum.blogspot.com/2011/10/blog-post_2753.html
ஹோட்டல் சட்னி
தேவையானவை:
வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 4 பல்
பச்சைமிளகாய் 4
கொத்தமல்லி தழை 1 கப் (ஆய்ந்தது)
உப்பு,எண்ணைய் தேவையானவை
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
செய்முறை:
கொத்தமல்லித்தழையை வென்னீரில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து பிழிந்து எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து வெங்காயம்,பூண்டு,தக்காளி,பச்சைமிளகாய் நான்கையும் நன்கு வதக்கவும்.
ஆறினவுடன் கொத்தமல்லித்தழை,உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
இந்த சட்னி இட்லி,தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
ஓட்டலில் இட்லிக்கு கொடுக்கும் சட்னிகளில் இதுவும் ஒன்று
Post a Comment