சேமியா வடை -- சமையல் குறிப்புகள்
சேமியா வடை தேவையான பொருட்கள்: வேக வைத்த சேமியா - கால் கப் மைதா - ஒரு மேஜைக்கரண்டி தேங்காய்த் துருவல் - ஒரு மேஜைக் கரண்டி பூண்டு - 1 பச்சை...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_4237.html
சேமியா வடை
தேவையான பொருட்கள்:
- வேக வைத்த சேமியா - கால் கப்
- மைதா - ஒரு மேஜைக்கரண்டி
- தேங்காய்த் துருவல் - ஒரு மேஜைக் கரண்டி
- பூண்டு - 1
- பச்சை மிளகாய் - 1
- பெரிய வெங்காயம் - 1
- கொத்துமல்லி இலை - சிறிதளவு.
செய்முறை:
சேமியாவை இரண்டு நிமிடம் வெந்நீரில் போட்டு, வேக வையுங்கள்.
பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
கொத்தமல்லி இலையையும் பொடியாக நறுக்குங்கள்.
பிறகு பூண்டை அரைத்து, இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அத்துடன் தேங்காய்த் துருவல், உப்பு, மைதா, வேக வைத்த சேமியா ஆகியவற்றையும் சேர்த்து, நன்றாக பிசைந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, வடையாக சேமியா கலவையைத் தட்டி, எண்ணெயில் போட்டு, இருபுறமும் திருப்பி வேக வைத்து எடுக்கவும்.
Post a Comment