மல்ட்டி மாவு சப்பாத்தி -- சமையல் குறிப்புகள்
மல்ட்டி மாவு சப்பாத்தி தேவையானவை: கடலை மாவு - 3 கப், அரிசி மாவு - 2 கப், கோதுமை மாவு - ஒரு கப், ஓமம் - அரை டீஸ்ப...
தேவையானவை: கடலை மாவு - 3 கப், அரிசி மாவு - 2 கப், கோதுமை மாவு - ஒரு கப், ஓமம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தனியாத்தூள்- அரை டீஸ்பூன், நறுக்கிய காலிஃப்ளவர், கேரட் துருவல், நறுக்கிப் பொடித்த பச்சைப் பட்டாணி - தலா அரை கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காலிஃப்ளவர், கேரட் துருவல், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு, எல்லா மாவுகளையும் ஒன்றாகக் கலந்து... வதக்கிய காய்கறி, தனியாத்தூள், மஞ்சள்தூள், ஒமம், உப்பு சேர்த்து ரொட்டி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவை உருண்டைகளாக செய்து, சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தவாவில் இட்டு எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் சுட்டு எடுத்தால்... மல்ட்டி மாவு சப்பாத்தி ரெடி.!
இதற்கு தொட்டுக் கொள்ள சாஸ், கொத்தமல்லி சட்னி, மற்றும் தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷன்.
மல்ட்டி மாவு சப்பாத்தி: காய்கறிகளுடன் கொஞ்சம் மாங்காய்த் துருவல் சேர்த்தால், புளிப்பு சுவையும் சேர்ந்து ருசியாக இருக்கும்.
Post a Comment