புதுவித ஸ்நாக்ஸ் ரெசிபி. கிராமியக்காரச்சேவு
கிராமியக்காரச்சேவு தேவையான பொருட்கள் : கம்பு, கேழ்வரகு, உதிர்த்த சோள மணிகள், தட்டைப்பயறு வேர்க்கடலை, அரிசி மாவு-தலா 1 கப், வெள்ளை எள், உளு...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_3862.html
கிராமியக்காரச்சேவு
தேவையான பொருட்கள் : கம்பு, கேழ்வரகு, உதிர்த்த சோள மணிகள், தட்டைப்பயறு வேர்க்கடலை, அரிசி மாவு-தலா 1 கப், வெள்ளை எள், உளுத்தம் பருப்பு, டால்டா-தலா 2 டீஸ்பூன், பூண்டு-5 பற்கள், வற்றல் மிளகாய்-15, உப்பு, எண்ணெய்-தேவைக்கு.
செய்முறை : தானிய வகைகளை மெஷினில் மாவாக்கி வைக்கவும். வற்றல் மிளகாயை இளஞ்சூடான நீரில் நனைத்து பூண்டுடன் அம்மியில் மைய அரைக்கவும். உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து மாவாக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நீர், டால்டா, சீரகம், எள், அரைத்த கலவை, உப்பு, உளுத்தம் பருப்பு மாவு போட்டு கலந்து காராசேவு பதத்திற்கு நன்கு பிசைந்து காராசேவு அச்சால் சூடான எண்ணெயில் பிழிந்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
Post a Comment