சூப் எப்படி செய்யணும்னு சொல்லுங்க ?''
.சூப் எப்படி செய்யணும்னு சொல்லுங்க ?'' ``சூப் தயாரிக்கும்போது, வாசனை திரவியங்களை அதிகமா சேர்க்கக் கூடாது. காரம் அதிகமா வேணும்னு சொல...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_7568.html
.சூப் எப்படி செய்யணும்னு சொல்லுங்க ?''
``சூப் தயாரிக்கும்போது, வாசனை திரவியங்களை அதிகமா சேர்க்கக் கூடாது. காரம் அதிகமா வேணும்னு சொல்றவங்களுக்கு மட்டும் தனியா கலந்து கொடுக்கலாம். சூப் தயாரிக்கும் பொருட்களின் அளவு சரியா இருக்கணும். இல்லாட்டி... சூப் ருசியா இருக்காது''
``எது சேர்க்கக் கூடாது ?''
``தக்காளி சூப்புக்கு மட்டுமே தக்காளியை சேர்க்கணும். மத்த எந்த சூப்புக்கும் தக்காளியை சேர்க்கக் கூடாது. புளிப்பு சுவைக்கு கொஞ்சூண்டு வினிகரை சேர்க்கலாம்''
``சூப் செய்தபின்னர்... ஆறிப் போச்சுன்னா... குடிக்கலாமா ?''
``சூப்பை சூடாத்தான் குடிக்கணும். ஆற வச்சு குடிச்சா நல்லா இருக்காது''
``அசைவ சூப் செய்யுறது எப்படி ?''
``வெஜிடேரியன் சூப் செய்யுறது மாதிரிதான். என்ன அதுக்கு அதிகமா தண்ணீர் சேர்க்கணும். அதிகமான நேரம் வேக வைக்கணும். அதேமாதிரி எலும்புகளை நல்லா உடைச்சு சின்ன சின்ன துண்டுகளா... போடணும். அப்பத்தான் எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜையும் வெந்து உட்பகுதி சத்துக்கள் கிடைக்கும். மீன், சிக்கன், மட்டன் எலும்புகளில் சூப் தயாரித்து குடித்தால் உடம்புக்கு நல்லது.''
``சூப் செய்யும்போது, வேற என்ன பண்ணணும் ?''
``குறிப்பாக சூப் கொதிக்கும்போது நுரை வரும். அவற்றை கரண்டி மூலமா வெளியேத்திடணும்.''
``வேற எதுவும் சேர்க்கணுமா ?''
``சூப் கெட்டியாக இருக்க...உருளைக் கிழங்கை வேகவைச்சு...அதை அரைச்சு சூப்பில் சேர்க்கலாம். உப்பு அதிகமாச்சுன்னா...நாலஞ்சு உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டால் உவர்ப்பு குறைந்துவிடும்.''
``பால் சேர்க்கலாமா?''
``பால் சேர்க்கலாம். ஆனால் ஆடை நீக்கிய பாலைத் தான் சேர்க்கணும். வெஸ்டர்ன் ஸ்டைலில் சூப் செய்யும்போது அதில் முருங்கைக்காயை சேர்க்கலாம். அதில் வைட்டமின் ஏ, சி இரண்டும் இருக்கு.``
``முட்டையை சூப் செய்யும்போது சேர்த்தா நல்லா இருக்குமா ?''
``சூப்போடு முட்டை சேர்ப்பதாக இருந்தால், தீயின் அளவை குறைச்சுக்கணும். முட்டையை தனி பாத்திரத்தில் அடிச்சு... கொதிக்கும் சூப்புக்கு மேலே உயரத்தில் இருந்து மெதுவாக நூல் மாதிரி ஊத்தி கலக்கணும்.''
``வெஜ் சூப்பில் வேற என்ன கலக்கலாம் ?''
``வெஜ் சூப்பில் பாலாடைக் கட்டி மற்றும் க்ரீம் கலந்து சூப்பை கெட்டியாக்கலாம். வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் அரைத்து கலக்கலாம்.''
``சூப் தயாரிக்க...எந்த பாத்திரம் நல்லது ?''
``பிரஷர் குக்கரில் சூப் தயாரித்தால் நன்றாக இருக்கும். பரந்த பாத்திரத்தில் சூப் தயாரித்தால் ருசியும், மணமும் போய்விடும்.''
``ரொம்ப தேங்க்ஸ் ... நீங்க சொன்னதிலேயே சுடச்சுட சூப் குடிச்ச மாதிரி இருக்கு!''
Post a Comment