கார அப்பம் தேவையானவை: உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் (மூன்றும் சேர்த்து) வேகவைத்த விழுது - ஒரு கப், மைதா மாவு - அரை கப், அரிசி மாவு - அரை க...

கார அப்பம்
தேவையானவை: உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் (மூன்றும் சேர்த்து) வேகவைத்த விழுது - ஒரு கப், மைதா மாவு - அரை கப், அரிசி மாவு - அரை கப், தயிர் - அரை கப், பச்சை மிளகாய் - 5, பெருங்காயப் பொடி - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு கிண்ணத்தில் தயிரை ஊற்றி, வேகவைத்த காய்கறி விழுதை அதோடு சேர்க்கவும். தேங்காய் துருவலையும் பச்சை மிளகாயையும் மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி, தயிர்க் கலவையில் சேர்க்கவும்.
அதில் உப்பு, பெருங்காயப்பொடி, மைதா மாவு, அரிசி மாவு ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைக்கவும். பிறகு, அப்பக்குழியில் (குழிப்பணியாரக் கல்லில்) சிறு சிறு அப்பங்களாக வார்த்து எடுக்கவும். கார்த்திகைக்கான கார அப்பம் இது.
கார அப்பம்: குடைமிளகாய், பப்பாளிக்காய் போன்ற பிற காய்கறிகளையும் சேர்த்துச் செய்யலாம். புளிக்காத தயிராக இருந்தால், நன்கு ருசிக்கும்.
----------------------------------------------------------------------
Post a Comment