கைமணம்! டிரைஃப்ரூட்ஸ் அப்பம்
டிரைஃப்ரூட்ஸ் அப்பம் தேவையானவை: முந்திரி, பாதாம், பிஸ்தா அரைத்த விழுது - அரை கப், மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பேரீச்சம்பழம...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_6072.html
டிரைஃப்ரூட்ஸ் அப்பம்
தேவையானவை: முந்திரி, பாதாம், பிஸ்தா அரைத்த விழுது - அரை கப், மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பேரீச்சம்பழம் - 4, ஏலக்காய் - 4, பொடித்த வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.
செய்முறை: பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு கிண்ணத்தில் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை அரைத்த விழுது, மைதா மாவு, கோதுமை மாவு, ஏலக்காய் பொடி, பேரீச்சை துண்டுகள், தேங்காய்துருவல் ஆகிய எல்லாவற்றையும் சேர்க்கவும். வெல்லத்தூளில் சிறிது நீர் விட்டு, கரைத்து வடிகட்டிக் கொதிக்க வைக்கவும்.
அந்த வெல்லத் தண்ணீரையும் மேற்சொன்ன கலவையில் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அப்பங்களாக வார்த்து எடுக்கவும். மெத்தென்றிருக்கும் ருசியான ஸ்வீட் அப்பம் இது.
டிரைஃப்ரூட்ஸ் அப்பம்: அத்திப்பழம், அக்ரூட், உலர் திராட்சை போன்ற டிரைஃப்ரூட்ஸ் வகைகளையும் சேர்த்துச் செய்யலாம். இன்னும் ‘ரிச்’சாக இருக்கும்.
Post a Comment