பிரெட் கார்ன் சாட் தேவையான பொருட்கள்: வேக வைத்து உதிர்த்த மக்காச் சோளம் - ஒரு கப், பிரெட் துண்டுகள் - 6, பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூ...

பிரெட் கார்ன் சாட்
தேவையான பொருட்கள்: வேக வைத்து உதிர்த்த மக்காச் சோளம் - ஒரு கப், பிரெட் துண்டுகள் - 6, பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், கெட்டித்தயிர் - அரை கப், சாட் மசாலாதூள் - ஒரு டீஸ்பூன், ஓமப்பொடி - அரை கப், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை: பிரெட் துண்டுகளை ஓரம் நீக்கி, சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டி, சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
தயிரில் சீரகத்தூள், மிளகுத்தூள், பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து, தனியே கலக்கி வைக்கவும். இப்போது, வேகவைத்த மக்காச்சோளத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டி, அத்துடன் பொரித்த பிரெட் துண்டுகள், உப்பு, சாட் மசாலாதூள் மற்றும் தயிர் கலவையையும் ஊற்றி, நன்கு கலந்து விடவும். இதன் மேலே ஓமப்பொடி, நறுக்கிய கொத்தமல்லியை தூவி விட்டுக் கொடுத்தால் சுவையோ சுவைதான்.
பிரெட் கார்ன் சாட்: இதனுடன் வறுத்த நிலக்கடலை, துண்டாக நறுக்கிய தக்காளி.. இவற்றை சேர்த்துக் கொடுத்தால் இன்னும் கலர்ஃபுல்லாகவும் சிறிது புளிப்புச் சுவையுடனும் அருமையாக இருக்கும்.
---------------------------------------------------
Post a Comment