புதுவித ஸ்நாக்ஸ் ரெசிபி. ‘‘ஹாலிபாப்’’
‘‘ஹாலிபாப்’’ தேவையான பொருட்கள்: சோயா உருண்டைகள்-15, கடலைப் பருப்பு-1 கப், உரித்த சின்ன வெங்காயம்-8, பச்சைமிளகாய்-2, தேங்காய்த் துருவல்-2 டீ...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_7874.html
‘‘ஹாலிபாப்’’
தேவையான பொருட்கள்: சோயா உருண்டைகள்-15, கடலைப் பருப்பு-1 கப், உரித்த சின்ன வெங்காயம்-8, பச்சைமிளகாய்-2, தேங்காய்த் துருவல்-2 டீஸ்பூன், மிளகாய்த் தூள்-1 டீஸ்பூன், பூண்டு-5 பல், நறுக்கிய இஞ்சி-1 துண்டு, கரம் மசாலா-½ டீஸ்பூன், மல்லித்தழை, புதினா தழை-சிறிதளவு, பிரெட் ஸ்லைஸ்-4, எலுமிச்சம் சாறு-1 டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள், எண்ணெய்-தேவைக்கேற்ப, பல் குத்தும் குச்சி-20.
செய்முறை : கடலைப் பருப்பை லேசாக வறுத்து வேக வைத்து வடி கட்டி ஆற விடவும். சோயா உருண்டைகளைக் கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு, பின் உருண்டைகளைப் பிழிந்து குளிர்ந்த நீரில் இருமுறை அலசி நீரை பிழியவும். இந்த உருண்டைகளை மிக்ஸியில் போட்டு அடித்து உதிர்த்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், பூண்டு, இஞ்சி, மல்லி, புதினா, கரம் மசாலா, பிரட் துண்டுகள் எல்லாம் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் கடலைப்பருப்பு, உதிர்த்த சோயா சேர்த்து வதக்கவும். இந்தக் கலவை ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்து எலுமிச்சம் சாறு கலந்து, நன்கு பிசைந்து சிறு சிறு கோலிகளாக உருட்டிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் இந்தக் கோலிகளைப் போட்டு பொரித்து, இதை பல் குத்தும் குச்சியில் சொருகி, சாஸ§டன் பரிமாறவும்.
---------------------------------------------------------------------------------------------
Post a Comment