புதுவித ஸ்நாக்ஸ் ரெசிபி. சைனீஸ் ரிப்பன்
சைனீஸ் ரிப்பன் மைதா மாவு - 1 கப், கோதுமை மாவு - ½ கப்,சோயா மாவு - ஒரு கைப் பிடி, சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன், மிக்ஸியில் பொடி செய்த பாதாம், ...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_8917.html
சைனீஸ் ரிப்பன்
மைதா மாவு - 1 கப், கோதுமை மாவு - ½ கப்,சோயா மாவு - ஒரு கைப் பிடி, சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன், மிக்ஸியில் பொடி செய்த பாதாம், பிஸ்தா-தலா 50 கிராம், இஞ்சி, பூண்டு விழுது, அஜினமோட்டோ - தலா ½ டீஸ்பூன், சோயா சாஸ் - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 150 மி.லி.
செய்முறை: எண்ணெயைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் தண்ணீரில் திக்காக முறுக்கு மாவுப் பதத்தில் கலந்து கொள்ளவும். இந்த மாவின் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் அதில், ஏதாவதொரு (முள்ளு அச்சு வேண்டாம்) முறுக்கு அச்சில் கலந்து வைத்துள்ள மாவைப் போட்டு பிழியவும். இரு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறலாம்.
----------------------------------------------------------------------------------
Post a Comment