சமையல் குறிப்புகள்! முட்டைத் தொக்கு.
முட்டைத் தொக்கு. தேவை:- வேக வைத்த முட்டை3; தக்காளி 1/4. கி. வெங்காயம் 150.கி.; மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி; தேவையான அளவு உப்பு. தாள...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_7834.html
முட்டைத் தொக்கு.
தேவை:- வேக வைத்த முட்டை3;
தக்காளி 1/4. கி. வெங்காயம் 150.கி.;
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி; தேவையான அளவு உப்பு.
தாளிக்கத் தேவையான அளவு எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு.
செய்முறை:- வாணலியை அடுப்பிலேற்றிக் காய்ந்ததும், கடுகு உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து, தக்காளி, வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, எண்ணெய் விட்டு, இளம் தீயில் நன்கு வதக்க வேண்டும்.
எண்ணெய் விட்டு விட்டு , வதக்க நன்றாக சுருண்டு வரும்.
இந்தச் சமயத்தில் வேக வைத்த முட்டைகளை இரண்டிரண்டாக கட் பண்ணி, அடுப்பில் உள்ள கலவையுடன் முட்டை உடைந்து விடாமல் மெதுவாகக் கலக்க வேண்டும்.
தாமதிக்காமல், அடுப்பை உடனே அணைத்துவிட வேண்டும்.
வாணலி சூடு ஆறும் வரை வத்திருருந்துப் பிறகு இறக்கி வைத்துப் பறிமாற வேண்டும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும், சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளவும், நல்ல சைட் டிஷ்ஷாகவும் பயன்படும். சுவையானது மட்டுமல்ல; எளிதில் செய்யக் கூடியதும் ஆகும்.
Post a Comment