புதுவித ஸ்நாக்ஸ் ரெசிபி. வான்டன் நட்ஸ்
வான்டன் நட்ஸ் தேவையான பொருட்கள் : வான்டன் செய்வதற்கு மேல் மாவு : முட்டை-1, மைதா-2 கப், தண்ணீர்-6 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவைக்கு. ஃபில்லிங்...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_9661.html
வான்டன் நட்ஸ்
தேவையான பொருட்கள் : வான்டன் செய்வதற்கு மேல் மாவு : முட்டை-1, மைதா-2 கப், தண்ணீர்-6 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவைக்கு.
ஃபில்லிங் - நட்ஸ் : முந்திரி, பாதாம், அக்ரூட், பிஸ்தா-தலா 10, வெள்ளரி விதை, காய்ந்த திராட்சை-தலா ஒரு டேபிள் ஸ்பூன், வேகவைத்து, தண்ணீரில் அலசி நன்கு பிழிந்து மசித்தசோயா உருண்டைகள்-½ கப், எண்ணெய்- தேவைக்கேற்ப.
செய்முறை : முதலில் முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். அத்துடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி, மைதா மாவைத் தூவிக் கெட்டியாக பிசைந்து இந்தக் கலவையை உலர்ந்த துணியில் முப்பது நிமிடம் மூடி வைக்கவும்.
ஃபில்லிங் செய்வதற்கு : முந்திரி, பாதாம், பிஸ்தா, மற்றும் அக்ரூட்டை வெறும் வாணலியில் வறுத்து கொரகொரப்பாக பொடிக்கவும். இதனுடன் வெள்ளரி விதை, காய்ந்த திராட்டை மற்றும் மசித்த சோயா உருண்டைகளை சேர்த்து பிசறி வைக்கவும்.
வாண்டன் செய்வதற்கு: மூடி வைக்கப்பட்டுள்ள மாவை தட்டையாக ½ இஞ்ச் அளவில் திரட்டி, சிறு சிறு சதுரங்களாக வெட்டவும். ஒவ்வொரு சதுரத்திலும் மைதாவைத் தூவி வைக்கவும்.
ஒரு சதுரத்தை எடுத்து அதன்மேல் ஃபில்லிங் கலவையை வைத்து எதிர் எதிராக மடித்து ஒட்டவும். இதை எண்ணெயில் பொன் நிறமாக பொரித்து எடுக்க. சுவையான கிரிஸ்ப்பி வான்டன் நட்ஸ் தயார்.
----------------------------------------------------------------------------
Post a Comment