சமையல் குறிப்புகள்-சிக்கன் 65
சிக்கன் 65 தேவையான பொருட்கள் எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் - 1/2 கிலோ தயிர் - 1/2 கப் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் தனியாத் தூள் - 1/2 டீ...
https://pettagum.blogspot.com/2011/07/65.html
சிக்கன் 65
தேவையான பொருட்கள்
எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் - 1/2 கிலோ
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
சிவப்பு கலர் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் - 1
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணை - பொரிப்பதற்கு
செய்முறை
* சிக்கனைச் சுத்தம் செய்து கொள்ளவும்.
* எலுமிச்சம் பழச்சாறு, உப்பு, தயிர், மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், சிவப்பு கலர் ஆகியவற்றோடு முட்டையை உடைத்துவிட்டு நன்கு கலக்கவும்.
* இந்த மசாலா கலவையை சிக்கனில் தோய்த்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
* கடாயில் எண்ணையைக் காய வைத்து மிதமான தீயில் சிக்கன் துண்டுகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
* இருபுறமும் திருப்பிப்போட்டு சிக்கன் வெந்ததும் எடுத்தால் மொறுமொறுவென இருக்கும்.
***********************************************************************
Post a Comment