சமையல் குறிப்புகள்! முட்டை உசிலி.
முட்டை உசிலி. தேவை:- முட்டை 4; கடலை பருப்பு 50கி; துவரம் பருப்பு 50கி; வெங்காயம் 100கி ; பச்சை மிளகாய் 4; தாளிக்கத் தேவையான அளவு எண்ண...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_08.html
முட்டை உசிலி.
தேவை:- முட்டை 4; கடலை பருப்பு 50கி; துவரம் பருப்பு 50கி;
வெங்காயம் 100கி ; பச்சை மிளகாய் 4;
தாளிக்கத் தேவையான அளவு எண்ணெய் ; கொஞ்சம் கருவேப்பிலை கொத்தமல்லி ; ஒரு சிறிய துன்டு இஞ்சி;
ஜீரகமும் பெருஞ்சீரகமும் கொஞ்சம் ; பிரிஞ்சி, பட்டை, கிராம்பு தாளிக்கத் தேவையான அளவு; தேவையான அளவு உப்பு.
செய்முறை:- 1/2 மணி நேரம் கடலைப் பருப்பையும், துவர ம் பருபபையும் ஊற வைத்து , தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காயம், பச்சை மளகாய், இஞ்சி முதலியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றோடு, அரைத்து வைத்துள்ள பருப்பு விழுதைப் போட்டுக் கலந்துவைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் கலவையை இட்லித் தட்டுகளில் வைத்து வேக வைத்துக் கொள்ளவேன்டும். ஆறியபின், பொல பொலவென உதிர்த்து வைத்துக் கொள்ளவேண்டும்.
வணலியை அடுப்பிலேற்றி, எண்ணெய் காய்ந்ததும், பிரிஞ்சி, பட்டை கிராம்பைப் பொடித்துப் போட்டுத்தாளித்து, 4 முட்டைகளையும் உடைத்து ஊற்றி, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
இத்துடன், பருப்புக் கலவையைக் கலந்து பொன்னிறமக வரும் வரை, லேசாக எண்ணெய் விட்டு இளம் சூட்டில், வதக்கி இறக்க வேண்டும்.
இதுவே முட்டை உசிலி எனப்படும் சுவையான பொரியல். சைட் டிஷ்ஷாக மட்டுமின்றி மாலைச் சிற்றுண்டியாகவும் பயன்படுத்தலாம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
Post a Comment