சமையல் குறிப்புகள்! ரவை மீன் புலாவ்
ரவை மீன் புலாவ் தேவையான பொருட்கள் முள் நீக்கிய மீன் - 1/4 கிலோ (வேக வைத்தது) பான்சி ரவை - 1/4 கிலோ புதினா - 1 கட்டு வெங்காயம் - 200 கிராம்...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_2682.html
ரவை மீன் புலாவ்
தேவையான பொருட்கள்
முள் நீக்கிய மீன் - 1/4 கிலோ
(வேக வைத்தது)
பான்சி ரவை - 1/4 கிலோ
புதினா - 1 கட்டு
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 2
உப்பு - தேவையான அளவு
எப்ணை - 1/2 குழிக்கரண்டி
செய்முறை
* வெங்காயம், தக்காளி, புதினா இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
* பின்பு நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து ரவையைப் போல் இருமடங்கு நீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
* தண்ணீர் கொதித்ததும், ரவையைக் கட்டியில்லாமல் சேர்த்துக் கிளறி தேவையான உப்பு போடவும்.
* இத்துடன் வேக வைத்த மீன் துண்டங்களைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Post a Comment