சமையல் குறிப்புகள்! முட்டை சப்பாத்தி ரோல்
முட்டை சப்பாத்தி ரோல் தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - ஒரு கப், முட்டை - ஒன்று, முந்திரி பருப்பு - பதினைந்து, திராட்சை - இருபத்தைந்து, உப்...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_7974.html
முட்டை சப்பாத்தி ரோல்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்,
முட்டை - ஒன்று,
முந்திரி பருப்பு - பதினைந்து,
திராட்சை - இருபத்தைந்து,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
* முதலில் மாவை சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
* முட்டையை உப்பு, மிளகுத்தூள் போட்டு அடித்து கொள்ளவும்.
* மாவைச் சப்பாத்திக்கு உருட்டுவது போல் உருட்டி எடுக்கவும்.
* முந்திரி பருப்பை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக உடைத்து கொள்ள வேண்டும்.
* பின்னர் தோசைக்கல்லை சூடாக்கி அதில் உருட்டிய சப்பாத்தியை இட்டு அதன் மேல்பக்கத்தில் முட்டை கலவையைத் தடவி, அதன்மேல் உடைத்த முந்திரி பருப்பையும் திராட்சையையும் தூவி எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். சுட்ட சப்பாத்தியை முட்டை தடவிய பாகம் உள்ளிருக்கும்படி ஒரு மடிப்பு மடித்து பரிமாறவும்.
குறிப்பு :
* மூன்று சப்பாத்திக்கு ஒரு முட்டை போதுமானது.
* முந்திரி இல்லாவிட்டால் வறுத்த கடலை போதும்.
* முட்டைக்கலவை ஒருபக்கம் தடவினால் போதும்.
* இதை சப்பாத்தி, பரோட்டா, அரபு நாடுகளில் கிடைக்கும் குப்பூசிலும் செய்யலாம்.
Post a Comment