இலவங்கப்பட்டை - மருத்துவ பயன்கள்!

இலவங்கப்பட்டை நீரிழிவு நோய்க்கு நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது. வாய் துர்நாற்றம் நீங்க வயிற...

இலவங்கப்பட்டை நீரிழிவு நோய்க்கு நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது. வாய் துர்நாற்றம் நீங்க வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும். செரிமான சக்தியைத் தூண்ட எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும். இருமல், இரைப்பு சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும். விஷக்கடிக்கு சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும். வயிற்றுக் கடுப்பு நீங்க வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும். பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது சிறந்த மருந்து. தாது விருத்திக்கு தாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத் தொலைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இத்தகைய அரிய பயன்களைக் கொண்ட கருவாப்பட்டையை இனியும் ஒதுக்கலாமா... முன்னோர்களின் வழியைப் பின்பற்றி நாமும் நோயின்றி நூறாண்டு வாழ்வோம்.

Related

மருத்துவ டிப்ஸ் 4015672420846731460

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item