சமையல் குறிப்புகள்! மட்டன் உப்புக் கண்டம்
மட்டன் உப்புக் கண்டம் தேவையான பொருட்கள் நறுக்கிய மட்டன் - 1/2 கிலோ மிளகாய் - 4 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் புளி - எலுமிச்சம் பழ அளவ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_6631.html
மட்டன் உப்புக் கண்டம்
தேவையான பொருட்கள்
நறுக்கிய மட்டன் - 1/2 கிலோ
மிளகாய் - 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
புளி - எலுமிச்சம் பழ அளவு
உப்பு - போதுமான அளவு
மிளகுத்தூள் - தேவையெனில்
செய்முறை
* புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
* அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து `பேஸ்ட்' பதத்தில் ரெடி செய்யவும்.
* இதை ஒவ்வொரு மட்டன் துண்டுகளிலும் தடவி, உப்பையும் தடவி வெயிலில் ஒரு வாரம் வரை வைக்கவும்.
* உப்புக் கண்டம் நன்கு காய்ந்ததும் மேலிருக்கும் உப்பை எடுத்துவிட்டு சுத்தமான பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.
* உப்புக்கண்டம் தயார்.
* இது ஒரு வருடம் வரை கெடாமலிருக்கும். தேவைப்படும் நேரங்களில் எண்ணையைக் காய வைத்து அதில் உப்புக்கண்டங்களைப் போட்டு பொரித்து எடுத்து சாப்பிடலாம்.
Post a Comment