சமையல் குறிப்புகள்! திடீர் கிச்சடி
திடீர் கிச்சடி தேவையான பொருட்கள்: * அரிசி: இரண்டு கப் * பாசிப் பருப்பு: ஒரு கப் * கடுகு: ஒரு தேக்கரண்டி * கறிவேப்பிலை: சிறிதளவு ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_5755.html
திடீர் கிச்சடி
தேவையான பொருட்கள்:
* அரிசி: இரண்டு கப்
* பாசிப் பருப்பு: ஒரு கப்
* கடுகு: ஒரு தேக்கரண்டி
* கறிவேப்பிலை: சிறிதளவு
* பச்சை மிளகாய்: மூன்று
* பெரிய வெங்காயம்: ஒன்று
* தக்காளி: ஒன்று
* பூண்டு: சிறிதளவு
* கொத்தமல்லி: தேவையான அளவு
* சமையல் எண்ணெய்: தேவையான அளவு
* மஞ்சள் தூள்: சிறிதளவு
* உப்பு: தேவையான அளவு
* நெய்: தேவையான அளவு
செய்முறை:
* குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
* அதில் கடுகு, கறிவேப்பிலை, வெட்டி வைக்கப்பட்ட மிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து சுமார் இரண்டு நிமிடம் வதக்கவும்.
* அத்துடன் ஆறு கப் தண்ணீர் சேர்க்கவும்.
* கலவை கொதிக்கும் போது, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
* பிறகு அரிசி மற்றும் பாசிப் பருப்பை அதனுடன் சேர்த்து, மூன்று விசில் வரை வேக விடவும்.
* சிறிதளவு கொத்தமல்லி தூவி , நெய் விட்டு, பரிமாறவும்.
தயிர், ஊறுகாய், மாங்காய், வறுத்த மோர் மிளகாய் இவற்றுடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
Post a Comment