நிதானமின்மை - பிழையான அணுகுமுறை, இஸ்லாம் விரும்பாதவை!

இஸ்லாம் எவ்வாறு சாந்தி, சமாதானமானதோ அவ்வாறே அதன் சகல சட்டங்களும், கோட்பாடுகளும் சாந்தமானவைகளாகும். குறிப்பாக இஸ்லாம் கடினப்போக்கையும் தீவிர...

இஸ்லாம் எவ்வாறு சாந்தி, சமாதானமானதோ அவ்வாறே அதன் சகல சட்டங்களும், கோட்பாடுகளும் சாந்தமானவைகளாகும். குறிப்பாக இஸ்லாம் கடினப்போக்கையும் தீவிரவாதத்தையும் வன்மையாகக் கண்டிக்கின்றது. இன்று பொதுவாகவே சகல மட்டங்களிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளின் பின்னணி நிதானமின்மையும் அதனைத் தீர்ப்பதில் கடைப்பிடிக்கும் பிழையான அணுகுமுறைகளுமாகும். எனவே எதிலும் மென்மையான போக்கைக் கடைப் பிடிப்பதானது இஸ்லாம் எமக்கு சொல்லித்தரும் அரிய உபதேசமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ‘மிருதுவான தன்மையைப் பற்றிப்பிடியுங்கள். கடினப் போக்கையும் தீய வார்த்தைகளையும் உங்களுக்கு எச்சரிக்கின்றேன். மிருதுவான தன்மை எந்தக் காரியத்தில் இருப்பினும் அதனை அல்லாஹ் அழகுபடுத்திப் பூரணப்படுத்துவான். எந்தக் காரியத்தில் இல்லாது போகுமோ அதனை அல்லாஹ் குறையானதாக ஆக்குவான் (நூல்: முஸ்லிம்) பிறிதொரு முஸ்லிமின் அறிவிப்பிலே ‘யார் மிருதுவை இழக்கின்றாரோ சகல நலவுகளையும் அவர் இழந்துவிட்டார் என்றும் வந்துள்ளது. எமது குடும்பம், தொழில், பிள்ளை வளர்ப்பு, நிர்வாகம் ஆகிய அனைத்திலேயும் இந்த உபதேசத்தை செயல்படுத்துவோமேயானால் எப்பிரச்சினையும் எதிர்நோக்காது. மட்டுமின்றி எப்பிரச்சினையையும் சாதிப்பதற்கும் ஏதுவாகும். கல்நெஞ்சம் படைத்த அரேபியர்களிடத்தில் புனித தஃவாப் பணியை மேற்கொள்ளவும் அவர்களை இஸ்லாமிய சட்டங்களை சிரமேற்று செய்யவும் பழக்குவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் காணப்பட்ட மிருதுவான பண்புகளே காரணம் என்பதை அல்- குர்ஆன் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது. (நபியே) நீங்கள் அல்லாஹ்வின் அருளின் காரணமாக அவர்களுடன் மிருதுவாக நடக்கின்aர். (மாறாக) கடுப்பான சொல் பேசுபவராகவும் கடின இதயமானவராகவும் இருந்திருப்பீரேயானால் உங்களை விட்டும் களைந்து சென்றிருப்பார்கள். எனவே அவர்களை மன்னித்து அவர்களுக்காக மன்னிப்பும் கோருவீராக (அல்குர்ஆன்- ஆலுஇம்ரான்: 159) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய பண்பே அந்த அரேபியர்களை அன்னாரின் சொல்லுக்குள் கட்டுண்டு வரச் செய்தது என்றால் மிகையாகாது. ஒரு ஹதீஸிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹுதஆலா மிருதுவானவன். அவன் மிருதுவையே விரும்புகிறான். இன்னும் கடினமான தன்மைக்குக் கொடுக்காத (நன்மை, சக்தி முதலிய) வைகளை மிருதுவான தன்மைக்குக் கொடுத்து வைத்துள்ளான். அதனை வேறு எத்தன்மைகளுக்கும் அவன் கொடுக்கமாட்டான் (முஸ்லிம்). மிருதுவாகப் பேசி இரண்டு வார்த்தைகளால் திருத்த முடியுமான எமது குழந்தைகள், பணியாட்கள் முதலியவர்களைத் திருத்துவதற்காக நாம் இரும்புக் கரங்களைப் பயன்படுத்தும்போது பிரச்சினைகள் மேலும் பூதாகரமாக மாறுவதை இன்றுநாம் காண்கிறோம். சில்லறை விடயங்களை முகம் கொடுப்பதில் ஏற்படும் குடும்ப வாழ்க்கைப் பிரச்சினைகள் ‘காழிக்’ கோர்ட்டுவரை செல்கின்றதை அவதானிக்கலாம். ஏககாலத்தில் பல மனைவியர்களுடன் எவ்வளவு அற்புதமாக நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள்? தவிர சக்களத்திப் பிரச்சினைகளை எவ்வளவு சுமுகமாக முகம் கொடுத்துள்ளார்கள்? என்பதனை வரலாற்று நூல்களில் சாதாரணமாகக் காணலாம். அதுமட்டுமின்றி மனைவியர்களுடன் மிக சிறப்பாக நடந்துகொள்கிறேன் என்பதனையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். உங்களில் சிறந்தவர் உங்களில் யார் மனைவியர்களிடம் சிறந்தவராக இருக்கின்றாரோ அவராகும், நான் உங்கள் அனைவரைக்காட்டிலும் மனைவிமாருடன் சிறந்தவனாக நடப்பவனாகும். அவ்வாறே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பணியாட்களுடன் மிகப் பண்பாகவும் அன்பாகவும் நடப்பவர்களாக இருந்துள்ளார்கள். பத்து வருடங்கள் அன்னாருக்குப் பணிவிடை புரிந்த ஹஜ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களே கூறுகிறார்கள். ''நான் செய்த ஒரு காரியத்தை விமர்சித்து ஏன் இப்படி செய்தாய்? என்றோ செய்யாத ஒன்றிற்காக ஏன் செய்யவில்லை என்றோ ஒருபோதும் கேட்டதில்லை.'' ஆனால் இன்று பணியாட்கள் சிறு தவறுகள்விடும்போது அடிப்பதும் வேலையை விட்டும் நிறுத்துவதும் சாதாரணமாக உள்ளது. தவறுகளை நிதானமாக, மரியாதையான முறையில் சுட்டிக்காட்டப்படும்போது தவறு செய்தவரும் திருந்தும் மனநிலையைப் பெறுவார். சில தவறுகள் முறைதவறி சுட்டிக்காட்டப்படும்போது குற்றவாளிக்கு அத்தவறின் மீதுள்ள பயமும் வெட்கமும் எடுபட்டு பகிரங்கமாக அதனை செய்ய முனைவார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் தொழுகையில் ஒரு மனிதர் தும்மவே முஆவியா இப்னுல்ஹகம் (ரளியல்லாஹு அன்ஹு) என்பவர் ‘யர்ஹமுகல்லாஹ்’ என்று கூறினார். ஏனைய ஸஹபாக்கள் இவரை (தொழுகையில் பேசுகிறாரே என்று) முறைத்துப்பார்த்தனர். மீண்டும் ஹஸ்ரத் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு உங்களுக்கு என்ன நேர்ந்தது, என்னை இப்படிப் பார்க்கின்aர்கள் என்று பேசவாரம்பிக்கவே தோழர்கள் தமது கைகளை தொடையில் அடித்து மெளனமாக இருக்கும்படி சைகையினை செய்தார்கள். தொழுது முடித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் பக்கம் திரும்பினார்கள். என்னை அதற்றவோ அடிக்கவோ ஏசவோ இல்லை. அவரைவிட கற்பிப்பதில் அழகிய முறையை கையாள்பவராக அதற்கு முன்போ பின்போ வேறு யாரையும் நான் காணவில்லை. என்னிடம் தொழுகையில் பேச்சுக்கள் பேசுவது பொருத்தமில்லாததாகும். ஏனெனில் தொழுகை என்பது இறை புகழ்ச்சியும் அவனின் தக்பீரும், திருவசனங்கள் ஓதுவதுமேயாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்தார்கள். (முஸ்லிம், அபூதாவூத்) பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒரு கிராமப்புறத்து அரபி பள்ளிவாசலுக்குள் சிறு நீர் கழிக்கவே அவரை ஸஹபாக்கள் அதற்றினர். உடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (கழித்து முடியட்டும்) விட்டுவிடுங்கள். ஒரு நீர் வாளியை ஊற்றி விடுங்கள். நீங்கள் (காரியங்களை) இலகுபடுத்துவதற்காக அனுப்பப்பட்டுள்ளார்களேயன்றி சிரமப்படுத்தவல்ல என்று பகர்ந்தார்கள். (புகாரி) மன்னிக்கும் மனப்பான்மையுடன் பிறர் உணர்வுகளை மதித்து செயற்படும்போது இவ்வழகிய பண்பு எமக்குள் கலந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

Related

அமுத மொழிகள் 1301615397792440347

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item