சமையல் குறிப்புகள்! பொரி கர்ட் பாத்
பொரி கர்ட் பாத் தேவையானவை: அரிசி பொரி - கால் கிலோ, தயிர் - 3 கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கடுகு, கடலைப்பருப்பு, ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_1246.html
பொரி கர்ட் பாத்
தேவையானவை: அரிசி பொரி - கால் கிலோ, தயிர் - 3 கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கடுகு, கடலைப்பருப்பு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு.
செய்முறை: தயிரில் உப்பு, இஞ்சித் துருவல் சேர்த்துக் கலக்கவும். பொரியில் சிறிது தண்ணீர் சேர்த்து நனைத்து, உடனே வடித்து விடவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, பொரியைப் போட்டு ஒரு முறை புரட்டி எடுத்து, தயிர் கலவையை விட்டுக் கலக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியைச் சேர்த்துப் பரிமாறவும்.
கோடைக்கேற்ற குளுகுளு கர்ட் பாத் இது.
Post a Comment