சமையல் குறிப்புகள்! மகிழ்ச்சி தரும் மசாலா பால்!
இரவில் உறங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே இரவு உணவை உண்டால் அது செரித்து விடும். இப்படி செரித்த பின்னர் உறங்குவது ஆரோக்கியத்திற்கு மட...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_1696.html
இரவில் உறங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே இரவு உணவை உண்டால் அது செரித்து விடும். இப்படி செரித்த பின்னர் உறங்குவது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, ஆழ்ந்த நித்திரைக்கும் அடிகோலும். அதேபோல இரவில் படுக்கப்போகும் முன் `மசாலா பால்' செய்து குடித்தால் அது வெயில் காலத்தில் உடல் சூட்டை சற்றே தணிப்பதுடன், உண்ட உணவு செரிமானமானாலும் வயிறை காலியாக வைக்காமல் அதே சமயம் `லைட்'டாக வயிற்றை நிரப்பும்.
மகிழ்ச்சி தரும் மசாலா பால்!
இளஞ்சூடான மசாலா பாலை குளிர் காலத்திலும் பருகலாம். மிகவும் `ஜில்'லென்று இல்லாமல் சற்றே கூலான மசாலா பாலை வெயில் காலத்திலும் அருந்துவது சுவை நாளங்களுக்கும் உடலுக்கும் நன்மை பயக்கும்.
மணமிக்க இந்த பாலை அருந்திவிட்டு படுத்தால் உடலும், மனதும் இதமாக உணர்வதை அனுபவித்து ஆழ்ந்த ஆனந்த நித்திரை கொள்ளலாம்.
சரியான அளவில் உலர் பழங்களை உண்பதானது உடலுக்கு பலப்பல நன்மைகளைப் பயக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இரும்புசத்து மிக்க பேரீச்சம் பழம், மலச்சிக்கலைப் போக்க வல்ல காய்ந்த திராட்சை, கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க வல்ல பாதாம் பருப்பு, வால்நட், செரிமானமும் மணமும் மிக்க ஏலக்காய்த்தூள், சக்தி மிகுந்த பால், அளவாக முந்திரிப் பருப்பு என எல்லாவற்றைப்ம் சேர்த்து மசாலாபால் செய்வோமா?
தேவையான பொருட்கள்
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 10 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 4
பாதாம் பருப்பு - 6
வால்நட் - 2
காய்ந்த திராட்சை - 10
பேரீச்சம் பழம் - 4
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
* வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
* தண்ணீர் கொதிக்கவும் அதில் பாதாம் பருப்புகளைப் போட்டு ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு சிறிது நேரம் கழித்து பாதாம் பருப்புகளின் தோலை ப்க்கவும்.
* வாணலியில் முந்திரி, பாதாம், வால்நட் மூன்றையும் மெல்லிய தீயில் கைசூடு பொறுக்கும் பதத்திற்கு வறுக்கவும்.
* வறுத்தவற்றை திராட்சை, பேரீச்சம் பழம் சேர்த்து மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
* பாலைக் காய்ச்சி சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் ஒரு கொதிவிட்டு டம்ளர்களில் ஊற்றவும்.
* ஒவ்வொரு டம்ளரிலும் 2 டேபிள் ஸ்பூன் அளவு பொடித்த பொடிபோட்டு ஸ்பூனால் கலக்கவும்.
* பாலின்மேல் பொடியாக அரிந்த உலர் பழங்கள் மற்றும் உலர் பருப்புகள் தூவிப் பரிமாறவும்.
* கமகம மசாலா பால் ரெடி.
Post a Comment