நிலத்தடி நீரைக் கண்டறிய அறிவியல்பூர்வமான வழிமுறை இருக்கிறதா?"விவசாயக்குறிப்புக்கள்
-நீங்கள் கேட்டவை "நிலத்தடி நீரைக் கண்டறிய அறிவியல்பூர்வமான வழிமுறை இருக்கிறதா?" "எங்கள் பகுதியில் உள்ள ...

https://pettagum.blogspot.com/2012/07/blog-post_9737.html
| ||||||||
"எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் தண்ணீருக்காக ஆயிரக்கணக்கான அடிகள் ஆழ்துளைக் கிணறு தோண்டி, நீர் கிடைக்காமல் கடன்காரர்களாகி நிற்கிறார்கள். என்னதான் பாயின்ட் வைத்து போர் போட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. ஓர் இடத்தில் தண்ணீர் இருக்கிறதா... இல்லையா என்பதைக் கண்டறிய அறிவியல் பூர்வமான வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் இப்படி விவசாயிகள் நஷ்டப்படுவதைத் தவிர்க்க முடியும். அப்படி வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்களேன்?" என்று பி. லோகநாதன், ஈரோடு மாவட்டம், குரும்பப்பாளையம் கிராமத்தில் இருந்து கேட்டுள்ளார். இவருக்கு, தமிழ்நாடு, வேளாண்மை பொறியியல் துறையின் கண்காணிப் பாளர் தேவேந்திரன் பதில் தருகிறார். ஒவ்வொரு மாவட்டத் தலைமையகத்திலும் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நிலபுவியிய லாளர் இருப்பார். இவரின் தலைமையில் உள்ள குழுதான் விவசாயிகளின் நிலங்களுக்குச் சென்று நீர்வளத்தைக் கண்டறியும். தங்களுடைய நிலத்தில் நீர்வளம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் விவசாயிகள், சம்பந்தபட்ட பகுதியின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ரூ.500 பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து, புவியியலாளர் உங்கள் நிலத்துக்கு வருகை தந்து மண் வளத்தை பார்வை இடுவார். பிறகு, குறிப்பிட்ட சில இடங்களில் 100 அடி ஆழம் வரை துளை இடுவார்கள். இந்தத் துளை இட்டவுடன் நிலத்துக்கு அடியில் உள்ள நிலவரம் குறித்து ஆராய்வார்கள். உதாரணத்துக்கு நிலத்தில் செம்மண் பாறை, அடுத்து சுண்ணாம்புப் பாறை... என்று லேசான பாறைகள் தென்பட்டால் அந்த இடத்தில் நீர்வளம் இருக்க வாய்ப்பு அதிகம். அதேசமயம், கரும்பாறைகள் தென்பட்டால் நீர் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. நீர்வளத்தைக் கண்டறிய 'எலக்டிரிக்கல் ரெசிடிவிட்டிவ் மீட்டர்' என்ற கருவியும் பயன்படுத்தப்படுகிறது. தற்சமயம் அரசாங்கத்திடம் உள்ள அறிவியல் ரீதியிலான நீர்வளம் கண்டறியும் முறை இதுதான். இந்த முறையைப் பின்பற்றி ஏராளமான விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். இப்படி தொழில்நுட்ப ரீதியாக செயல்பட்டால் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இந்த முறையின் மூலம் ஒருசில சமயங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதிகபட்சமாக சரியாகவே கணிக்கப்படுகிறது." |
Post a Comment